Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்

போலி தீவிரவாதிகள்!

தலையங்கம்

பத்தே அடி தூரத்தில் தண்டவாளம் பிளந்துகிடக்க, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை மிகச் சரியாக நிறுத்தி, பல நூறு உயிர்களைக் காப்பாற்றினார் அதன் ஓட்டுநர். அதற்கு முன்பாக அதே தண்டவாளத்தைக் கடந்தபோது எழுந்த அதிர்வைவைத்து முன்னெச்சரிக்கை கொடுத்தவர் மற்றொரு ரயிலின் கார்டு. இருவருக்கும் இதயபூர்வமான நன்றிகள்!

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழறிஞர்கள் கோவை வந்து குழுமப்போகும் நேரத்தில், இலங்கை விவகாரத்தில் ராஜபக்ஷே மீது 'மட்டும்' தங்கள் கோபத்தை வெளிப்படுத்தித் துண்டுப் பிரசுரம் போட்டு, குண்டுவைத்த கொடூரர்கள் யார் என்று ஆராய்ச்சி நடக்கிறது!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள்தான் இந்த சதிச் செயலை அரங்கேற்றி இருப்பார்கள் என்று மக்கள் நம்பிவிடும்பட்சத்தில், அவர்களின் கோபம் திசை திரும்பும். இலங்கை விவகாரத்தில் கும்பகர்ணத் தூக்கம் போடும் மத்திய - மாநில அரசுகளின் மீதான வெறுப்பு தற்காலிகமாகவாவது பின்னுக்குப் போகும்!

'இலங்கைத் தமிழனுக்கு இன்னும் விடிவு கிடைக்காத நிலையில், இங்கே செம்மொழி மாநாடு தேவையா?' என்று எதிர்ப்புக் குரல் எழுப்பி வருபவர்கள், இன்னும் சில நாட்களுக்குப் போராட்டம் - ஆர்ப்பாட்டம் என்று வீதிக்கு வந்தால்... 'தீவிரவாதச் சந்தேக'க் கண்ணோட்டத்தோடு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த ரயில் கவிழ்ப்பு முயற்சி வகையாக வழி செய்துவிட்டது!

இலங்கைத் தமிழர்களின் உயிர் பலியைக் கண்டு துடிக்கின்ற இதயங்களாக இருந்திருந்தால், இங்கே இருக்கும் தமிழர்களின் உயிரைப் பறிக்கக்கூடிய பயங்கர சதியில் ஈடுபட மனம் வருமா? ஒரு தமிழனின் ரத்தத்தால், இன்னொரு தமிழனின் ரத்தத்தைக் கழுவ முடியுமா?

சரம்சரமாகச் சடலங்களைச் சவக்குழிக்குள் தள்ளிவிட்டு, அகிம்சா மூர்த்தியான மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் உருக்கமாக மலர் அஞ்சலி செலுத்திய ராஜபக்ஷேவின் போலி வேடத்துக்கு ஒப்பானதுதானே இந்தத் தண்டவாளத் தகர்ப்பு முயற்சியும்?

தலையங்கம்
தலையங்கம்