Published:Updated:

அணு அணுவாக மரணம்!

அணு அணுவாக மரணம்!


தண்டணை விகடன்  
அணு அணுவாக மரணம்!
அணு அணுவாக மரணம்!
அணு அணுவாக மரணம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
லதானந்த்
அணு அணுவாக மரணம்!
அணு அணுவாக மரணம்!

ண்டனைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! பழங்காலத்தில் தண்டனைகள் எல்லாமே குரூரமாக யோசித்துக் கொடுக்கப்பட்டன. அதில் ஒன்று, எதிரிகளின் தோலை உரிப்பது. 'தோலை அகற்றிவிட்டால், இறப்புக்குப் பிறகு மறுவாழ்வு குற்றவாளிக்குக் கிடைக்காது' என்ற மதம் சார்ந்த நம்பிக்கையும் காரணம். எதிரிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பதற்காக, உரிக்கப்பட்ட தோலைப் பொதுமக்கள் பார்வைக்கும் வைப்பார்கள். பார்க்கும் மக்களைப் பதறவைப்பதே தண்டனைகளின் நோக்கமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் முன்பு ராஜ துரோகிகளை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தலையை வெட்டி, சரிவான தளங்களில் உருட்டிவிடுவார்கள். பார்ப்பவருக்குத் துரோகம் செய்ய மனசு வருமா?

தேசத் துரோகம், பெற்றோர்களைக் கொல்வதுபோன்ற குற்றங்களுக்கு சீனாவில் கி.பி.900-லிருந்து 1905 வரை உள்ள காலகட்டத்தில் வழங்கப்பட்ட தண்டனைதான் கொடூரமானது. குற்றவாளியைக் கட்டிவைத்து ஆங்காங்கே சதையை அறுப்பார்கள். இதற்கு சீன மொழியில் லிங்ச்சி என்று பெயர். குற்றவாளி சுயநினைவை இழந்தால், வலி தெரியாதே? நினைவை இழக்காமல் இருப்பதற்கு மருந்து கொடுப்பார்கள். முதலில் கண்கள், அப்புறம் காது, மூக்கு உதடு, நாக்கு, விரல்கள் என்று ஒவ்வோர் உறுப்பாக எடுப்பார்கள். குற்றவாளி உயிரைவிடுவதற்கு மூன்று நாட்கள் ஆகிவிடும். குற்றவாளியின் உறவினர்கள் லஞ்சம் கொடுத்தால், தொண்டையை அறுத்து உடனே உயிர் எடுக்கப்படும்!

அணு அணுவாக மரணம்!

மாபெரும் தேசத் துரோகக் குற்றத்துக்கு இங்கிலாந்தில் வழங்கப்பட்ட தண்டனை அடி வயிறைக் கலக்கும். குற்றவாளியை வீதியில் இழுத்து வந்து, தூக்கில் போடுவார்கள். உயிர் பிரியும் முன் தூக்குக் கயிற்றை வெட்டிவிடுவார்கள். உயிர் ஊசலாடிக்கொண்டு இருப்பவரின் வயிற்றைக் கிழித்து குடலை உருவுவார்கள்!

அணு அணுவாக மரணம்!

பெர்ஷியாவில் கொடுக்கப்படும் கொடூர தண்டனை இது... குற்றவாளிக்குப் பாலையும் தேனையும் மலமிளக்கிகளையும் கலந்து கட்டாயமாகப் புகட்டிவிடுவார்கள். கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும். அவரது உடல் முழுக்க தேனைப் பூசி, குட்டையில் மிதக்கவிடுவார்கள். உடலில் பூசியிருக்கும் தேன் பூச்சிகள், தேனீக்கள், ஈக்கள் போன்றவற்றை ஈர்க்கும் அல்லவா? அவை குற்றவாளியின் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும். குற்றவாளி பட்டினியால் சீக்கிரம் இறந்துவிடாமல் இருக்க பால், தேன் புகட்டும் சிகிச்சை தொடர்ந்து செய்யப்படும். சில நாட்களில் குற்றவாளிக்குப் பைத்தியம் பிடித்துவிடும். ஓரிரு வாரங்கள் கொடுமையான வேதனையை அனுபவித்துவிட்டு ஆசாமி க்ளோஸ்!

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பழங்காலத்தில் குற்றவாளியைத் தண்ணீரிலோ தார், கொழுப்பு, எண்ணெய் போன்றவற்றிலோ உயிருடன் வேகவைத்துக் கொல்வார்கள். சில சமயம், ஈயத்தைக் காய்ச்சி அதில் முக்கிக் கொல்வதும் உண்டு. சிலரைக் கதறக் கதற எரித்துக் கொல்வதும் உண்டு. பொதுவாக, விஷம் கொடுத்துக் கொலை செய்பவர்களுக்கும், கலப்படம் செய்தவர்களுக்கும் இந்த 'சொக்கன் 65' தண்டனை நிறைவேற்றப்பட்டது!

அணு அணுவாக மரணம்!

ரோமாபுரியிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் அந்தக் காலத்தில் குற்றவாளியை ரம்பத்தால் அறுத்து மரண தண்டனை கொடுக்கப்பட்டது. ஒரு கம்பத்தில் குற்றவாளியை நிர்வாணமாகத் தலைகீழாகத் தொங்கவிடுவார்கள். இரண்டு கால்களையும் விரித்து இரு மரத் தூண்களில் கட்டிவிடுவார்கள். இரு தொடைகளுக்கும் இடையில் அறுப்பு ஆரம்பமாகும். குற்றவாளி நெடுநேரம் உயிருடன் இருந்து வேதனையை அணு அணுவாக உணர்ந்து மெள்ளச் சாவார்!

பண்டைய ரோமில் குற்றவாளியை ஒரு மைதானத்தில் இறக்கிவிடுவார்கள். பசியோடு புலி ஒன்று திறந்து விடப்படும். புலி ஜெயித்தால் தண்டனை. குற்றவாளி ஜெயித்தால் சுதந்திரம். இந்த ஆள்- புலி ஆட்டத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் முண்டியடிப்பார்கள்!

நாகரிகம் வளர வளர, இந்தக் கொடூரமான தண்டனை முறைகள் வழக்கொழிந்துபோயின. இப்போது தூக்கு, விஷ ஊசி, மின்சாரம் பாய்ச்சி, நாகரிகமாகக் குற்றவாளிகளைக் கொல்கிறார்கள்!

அணு அணுவாக மரணம்!