Published:Updated:

சிக்கன் சாப்பிட்டால் ஜெயில்!

சிக்கன் சாப்பிட்டால் ஜெயில்!


தண்டணை விகடன்
சிக்கன் சாப்பிட்டால் ஜெயில்!
சிக்கன் சாப்பிட்டால் ஜெயில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிக்கன் சாப்பிட்டால் ஜெயில்!
யா.நபீசா
சிக்கன் சாப்பிட்டால் ஜெயில்!
சிக்கன் சாப்பிட்டால் ஜெயில்!

விலங்குகளுக்குத் தண்டனை கொடுக்கும் விபரீதம் சில சமயம் நடப்பது உண்டு! வாஷிங்டனில் வசித்த மீஷா என்கிற நாய்க்கு சிக்கன் என்றால் பிரியம். பக்கத்து வீட்டில் இருந்த கோழியைப் பார்த்ததும், பாய்ந்துவிட்டது. கோழியின் உரிமையாளரான செவெர்சன், விலங்குகள் கட்டுப்பாட்டு நிலையத்தில் புகார் கொடுத்தார். எக்கச்சக்கக் கோபத்தில், 'இது ஒரு மோசமான வெறி பிடித்த நாய்' என்று பில்டப் கொடுத்தார். உடனே, மீஷாவைப் பிடித்து சிறையில் அடைத்துவிட்டார்கள். சிறையில் இரவு முழுக்க, ஊளையிட்டு மீஷா செய்த ரகளையால் யாருமே தூங்க

முடியவில்லை. உடனே, மீஷாவை விலங்குகள் காப்பகத்தில் உள்ள ஒரு கூண்டில் அடைத்து, மூன்று வேளையும் சைவ உணவை வழங்கும்படி உத்தரவிட்டார்கள். மீஷாவின் உரிமையாளர், வழக்குத் தொடர்ந்தார். மூன்று மாத விசாரணைக்குப் பின், "என்னய்யா இதெல்லாம் ஒரு கேஸா?" என்று சலித்துக்கொண்டே கேஸை முடித்துவிட்டார் நீதிபதி. அதற்குள் மீஷா 10 கிலோவில் இருந்து ஆறு கிலோவாக எடை குறைந்துவிட்டது. எல்லாம் கவலைதான் காரணம்!

சிக்கன் சாப்பிட்டால் ஜெயில்!
சிக்கன் சாப்பிட்டால் ஜெயில்!