Published:Updated:

சுற்றி நின்று கல்லால் அடி!

சுற்றி நின்று கல்லால் அடி!


தண்டணை விகடன்
சுற்றி நின்று கல்லால் அடி!
சுற்றி நின்று கல்லால் அடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சுற்றி நின்று கல்லால் அடி!
அ.ஆதித்யன்
சுற்றி நின்று கல்லால் அடி!
சுற்றி நின்று கல்லால் அடி!

ண்டனை கொடுப்பதில் அரபு நாடுகள் ஒவ்வொன்றும் அதிரடி ரகம். இரான் நீதிமன்றத்தில் மரணத் தீர்ப்பை எழுதிவிட்டு பேனாவின் நுனியை உடைக்கிறார் களோ இல்லையோ, குற்றவாளி களின் மண்டையைக் கல்லால் அடித்து

உடைத்துவிடுவார்கள். குற்றவாளி பெண்ணாக இருந்தால், பாதி உடலை மண்ணில் புதைத்து விடுவார்கள். ஆண்களுக்கு அந்தச் சலுகையும் கிடையாது. சுற்றி நிற்கும் மக்களுக்குக் கற்கள் கொடுக்கப்படும். தபதபவென்று வந்து விழும் கற்களால் மண்டை உடைந்து, ரத்தம் கொட்டி

இறந்துவிடுவார் குற்றவாளி. ஒரு வேளை ஆயுசு கெட்டியாக

இருந்து, உயிர் பிழைத்தால் ஆயுள்

தண்டனைக் கைதியாக வாழ வேண்டும்.

சுற்றி நின்று கல்லால் அடி!

இந்தியாவுக்கு சிவசேனா மாதிரி மலேசியாவில் ஷரியா. அங்கே தப்பு செய்தால், பிரம்படித் தண்டனை கிடைக்கும். பீர் குடித்தால், ஆள்விட்டு அடித்தால் பிரம்படி விழும். அத்தனை பேர் சுற்றி நிற்க, அடித்துத் தோலை உரித்துவிடுவார்கள். ஒவ்வொரு வருடமும் 1,000 பேருக்கு மேல் பிரம்படித் தண்டனை வாங்குகிறார்கள். பிரம்புக் குச்சியை அடிப்பதற்கு முன்பு உப்புத் தண்ணீரில் ஊறவைத்துவிடுவார்கள். அப்போதுதான் அடிக்க வசதியாக இருக்குமாம்.

கண்ணுக்குக் கண் என்கிற தண்டனையை இன்னமும் நிலுவையில் வைத்திருக்கிறது சவுதி அரேபியா. சவுதி யில் வாழ்ந்த இந்தியர் அப்துல் லாதிஃப். சவுதிக் குடிமகனோடு சண்டை போடும்போது, லாதிஃபின் கை பட்டு அவருக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோய்விட்டது. பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் முறையிட, நீதிபதி லாதிஃபின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்.

சுற்றி நின்று கல்லால் அடி!

இரானிலும் இதே மாதிரி சம்பவம் நடந்தது. 27 வயது இளைஞர் ஒருவர் கோபத்தில் அவரது காதலி மீது அமிலம் ஊற்றிவிட்டார். அவருக்கு அமிலத்தின் வலியை 'உணர்த்த' விரும்பிய நீதிமன்றம், அந்தப் பெண்ணின் முன்னால், அந்தக் காதலனின் கண்களில் சொட்டுச் சொட்டாக Hydrochloric அமிலத்தை ஊற்றச் சொல்லி தீர்ப்பு வழங்கியது!

சுற்றி நின்று கல்லால் அடி!
சுற்றி நின்று கல்லால் அடி!