Published:Updated:

கொலைகளின் கலைஞன்!

கொலைகளின் கலைஞன்!


தண்டணை விகடன்
கொலைகளின் கலைஞன்!
கொலைகளின் கலைஞன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கொலைகளின் கலைஞன்!
இரா.மன்னர்மன்னன்
கொலைகளின் கலைஞன்!
கொலைகளின் கலைஞன்!

திரிகளுக்கு மரண தண்டனைகள் தந்தே வரலாற்றில் சிவப்புப் புள்ளியாக இடம் பிடித்த சில வில்லன் வி.ஐ.பி-க்கள் இவர்கள்... கொலைகளின் கலைஞன் சந்தேகமே இல்லாமல் ஹிட்லர்தான். 'அட, சீக்கிரம் நம்மைக் கொன்று தொலைக்க மாட்டார்களா?' என்று சித்ரவதைக்கு உள்ளாகும் யூதர்கள் வேண்டும் அளவுக்குக் கொடூர யுத்திகளில் தண்டனை அளித்தவன். ஒரு குட்டி வேனுக்குள் 300 பேரை அடைத்து, அதன் புகைபோக்கியை வேனுக்குள்ளேயே திருப்பிவிட்டது ஒரு சாம்பிள். லட்சக்கணக்கான யூதர்களை உலகின் பார்வை படாமல், இவன் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தது நடுங்கச் செய்யும் வரலாறு!

எதிரி துடிதுடிப்பதைப் பார்த்து துளித்துளியாக ரசிப்பவன் நீரோ மன்னன்.

இவனிடமிருந்து தப்பிப்பதற்காக வேண்டி விரும்பித் தற்கொலை செய்துகொள்வார்கள் என்பதே இவனுடைய கொடூரத்துக்கான உரைகல்!

நீரோவின் காலத்தில் இருந்த சிந்தனைவாதி ஸெனேகா, தன்னை நீரோ தேடுவது தெரிந்து தன் கை நரம்புகளை அறுத்துக் கொண்டார். ஹீமோகுளோபினின் அதிக அடர்த்தி காரணமாக அறுத்த இடம் ஒட்டிக் கொண்டுவிட்டது. பிறகு, கால் நரம்புகளையும் அறுத்துக்கொண்டார் இம்முறையும் இவருக்கு அதிர்ஷ்டம்(?) இல்லை. கடைசியில் கொதிக்கும் நீரில் தலையை அமிழ்த்தி தற்கொலை செய்துகொண்டார்!

உலகை வெல்லும் ஆசையோடு புறப்பட்ட தைமூருக்கு தனித் தனியாகத் தண்டனை கொடுக்க நேரம் இருக்கவில்லை. எனவே, கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தான்.

கொலைகளின் கலைஞன்!

மக்களை வரிசையாக மண்டியிட வைத்து, அவர்களின் கழுத்து உயரத்துக்குப் பெரிய கத்தியைப் பிடித்த தன் காவலர்களை வரிசையின் குறுக்காக ஓடச்சொல்வான் தைமூர். தலைகள் தடதடவென்று கீழே உருண்டு விழும்!

ரஷ்யாவில் 'டிரான்சில்வேனியா' பகுதியைச் சேர்ந்த ஒரு சிற்றரசன் வாலாட் டிராகுலா. ரத்த வெறி பிடித்த சைக்கோ. ரத்தம் குடிக்கும் வேம்பயர்கள் பற்றிய கதைகள் இவனால்தான் எழுந்தன. இவன் இறந்து உலகின் முதல் வேம்பயராக மாறிவிட்டான் என்று ஒரு காலத்தில் ஐரோப்பாவே நம்பியது. அந்த அளவுக்குக் கைதிகளைக் கம்பியில் குத்தித் தொங்கவிடுவது, சிறிய கத்தியால் உடலெங்கும் கீறுவது, துளையிடுவது, உடம்புத் தோலை உரிப்பது என்று கொடூரமான தண்டனைகள் கொடுத்தான்!

கொலைகளின் கலைஞன்!
கொலைகளின் கலைஞன்!