Published:Updated:

தவணை முறையில் மரணம்!

தவணை முறையில் மரணம்!


தண்டணை விகடன்
தவணை முறையில் மரணம்!
தவணை முறையில் மரணம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தவணை முறையில் மரணம்!
சிவம், மன்னர்மன்னன்
தவணை முறையில் மரணம்!
தவணை முறையில் மரணம்!

ண்டனை கொடுப்பதில் தமிழ்நாடும் சளைத்தது அல்ல... நொடிக்கு நொடி ஒருவனை நடைப் பிணமாக்கிக் கொல்லும் கொடூரம் தமிழ்நாட்டிலும் நடந்திருக்கிறது.

தென்னிந்தியாவில் சைவ சமயம் பரவிய வரலாற்றைப் படிப்பவர்கள், 'திருஞான சம்பந்தரை எதிர்த்த எட்டு ஆயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்' என்ற தகவலைப் படித்திருக்கலாம். சைவம் - சமணம் ஆகிய இரண்டும் மோதிக்கொண்ட கால கட்டத்தில் இங்கே பிரபலமாக இருந்தது கழுவேற்றுதல். இரு தரப்புத் 'தலை'களும் அரசன் முன்பு அனல் வாதம், புனல் வாதம் என்று போட்டி போடுவார்கள்.

அதாவது, பனை ஓலையில் அவரவர் இறைவனைப்பற்றி பாடல் எழுதி ஓடும் நதியிலும், எரியும் தீயிலும் போட வேண்டும். ஓலை நீரில் அடித்துச் செல்லாமலும், தீயில் எரிந்துவிடாமலும் நிலைத்து நிற்பதே வெற்றியாகக்கொள்ளப்படும். வென்றவர்கள் அரசனின் ஒத்துழைப்போடு சமயத்தைப் பரப்பக் கிளம்பிவிடுவார்கள். தோற்றவர்கள், கழுவேற வேண்டியதுதான்.

கழு என்பது பார்ப்பதற்கு தேங்காய் மட்டை உரிக்கும் கடப்பாரையைப்போல இருக்கும். கழுவேறுதல் என்றால், சிம்பிள்... அந்தக் கழுவில் உட்காரவைக்கப்படுவது.

ஆசனவாயின் வழியாக உள்ளே இறங்கும் கழுவால் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படும். நுரையீரல், இதயம், உடலின் உறுப்புகளைக் கூரான கம்பி கிழித்துக்கொண்டு தாடை அல்லது தலை வரை செல்வதால், மிகக் கொடூரமான மரணம் தவணை முறையில் கிடைக்கும்.

தவணை முறையில் மரணம்!

ஆயிரக்கணக்கான பேரைக் கழுவேற்ற வேண்டும் என்றால், மூங்கில்களைத் தரையில் ஊன்றி தற்காலிகமாகக் 'கழு' செய்வார்கள். முதன்முதலில் கழுவேற்றத்தைத் தண்டனையாகப் பயன்படுத்தியவர்கள் கிழக்கு ஆசிய மன்னர்கள். பின்னர், இந்த முறையை முதலாம் டேரியஸ் மன்னன் பயன்படுத்தி 3,000 பாபிலோனியர்களைக் கொன்றதாக கிரேக்க வரலாற்றில் ஹிரோடேட்டஸ் எழுதியுள்ளார். கழுவேற்றும் முறை பார்ப்பவர் களையே திகிலூட்டும்விதமாக அமைந்ததால், சிலுவையில் அறையும் முறையைப் பின் நாட்களில் கொண்டுவந்தார்கள். தமிழகத்தில் கழு கலாசாரம் முடிந்ததும், குற்றவாளிகளின் முதுகுத் தோலை உரித்து எடுத்தார்கள். ஒரு நபரின் நடத்தை மேல் சந்தேகம் வந்தால், அவருக்கு மொட்டை அடித்து, உடலில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் புள்ளி வரைந்து, கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் அனுப்பி அவமானப்படுத்தினார்கள்.

இப்படி அவமரியாதை செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் தற்கொலை செய்துகொண்டார்கள். காலப்போக்கில் கொடூரமான இந்தத் தண்டனை மறைந்துவிட்டது!

தவணை முறையில் மரணம்!
தவணை முறையில் மரணம்!