Published:Updated:

பெண்ணாகப் பிறந்ததே குற்றமா?

பெண்ணாகப் பிறந்ததே குற்றமா?


தண்டணை விகடன்
பெண்ணாகப் பிறந்ததே குற்றமா?
பெண்ணாகப் பிறந்ததே குற்றமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெண்ணாகப் பிறந்ததே குற்றமா?
இரா.மன்னர்மன்னன்
பெண்ணாகப் பிறந்ததே குற்றமா?
பெண்ணாகப் பிறந்ததே குற்றமா?

லகெங்கும் பெண்கள், பெண்களாகப் பிறந்த குற்றத்துக் காக (?) என்றே அனுபவித்த... அனுபவித்து வரும் தண்டனைகள் மிக அதிகம். போர்க்களத்துக்கு வந்ததற்காக ஜோன் ஆஃப் ஆர்க்குக்குத் தண்டனை. தடகளத்துக்கு வந்ததற்காக ஜெஸிபாவுக்குக் கொலை மிரட்டல். இந்துக்களின் வேதமாகிய மனுஸ்மிருதியோ, பெண்கள் படிப்பதே பாவம் என்கிறது!

497-வது பிரிவின்படி திருமணமான ஒரு பெண்ணை வேறு ஆண் கற்பழித்தால், அவள் கணவன் வழக்குப் போட்டு குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கித் தரலாம். ஆனால், இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட மனைவிக்கு புகார் கொடுக்கும் உரிமை உட்பட எவ்வித உரிமையும் இல்லை!

வாரிசு உரிமைச் சட்டம், பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் பங்கு உள்ளது என்று

சொல்கிறது. இது பலருக்கும் தெரியும். ஆனால், 1990-ம் ஆண்டின் வாரிசு உரிமைச் சட்டத் திருத்தம் பிரிவு 23-ன் படி, தந்தையின் சொத்தை விற்றால் தான், அதில் பெண் வாரிசுகளுக்குச் சம பங்கு அளிக்கப்படும். மற்றபடி, ஆண் வாரிசுகள் சொத்தை அனு பவித்து மட்டும் வந்தால், அதில் பெண்கள் பங்கு கேட்க முடியாது!

'18 வயதுக்கு உட்பட்ட பெண்ணைத் திருமணம் செய்வது தண்டனைக்கு உரிய குற்றம். அப்படித் திருமணம் செய்யும் ஆணுக்கு சிறைத் தண்டனை கொடுக்கப்படும்' என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நீதிமன்றத்தால் அந்தத் திருமணத்தை ரத்து செய்ய முடியாது. 2007 ஜூலையில் '17 வயதுப் பெண்ணின் திருமணம் செல்லும்' என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது!

பெண்ணாகப் பிறந்ததே குற்றமா?

உலகின் மிக வளர்ந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில்கூட, 'கணவன், மனைவியை அடிக்கலாம். ஆனால், அடிக்கப் பயன்படுத்தும் குச்சி சுண்டுவிரலைவிடப் பருமனானதாக இருக்கக் கூடாது' என்று ஒரு முட்டாள்தனமான சட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு வருடமும் சொத்து சார்ந்த வழக்குகளில் சரியான நியாயம் கிடைக்காமல் தடுமாறும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும். கற்பழிப்பு சார்ந்த வழக்குகளில் சாட்சியக் குறைபாடுகளால் நியாயம் கிடைக்காத பெண்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டும். வரதட்சணை கொடுமைகளால் பாதிக்கப்பட்டு இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகம்!

பெண்ணாகப் பிறந்ததே குற்றமா?

தாலிபான் கால ஆப்கானிஸ்தானில் பெண்கள் நெயில் பாலீஷ் போட்டால், விரல் துண்டிக்கப்படும். பர்தா அணியவில்லை என்றால் சாட்டையடி. பர்தா அணியாமல் செல்லும் பெண்ணை ஏற்றிச் செல்லும் டாக்ஸி டிரைவருக்கே சிறைத் தண்டனை உண்டு. இரானில் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமலேயே ஓர் ஆண் எத்தனை திருமணங்களும் செய்யலாம். விவாகரத்து பெற்ற பெண் பெறும் ஜீவனாம்சத்துக்கு அரசாங்கம் அதிக வரி விதிக்கும்!

பெண்ணாகப் பிறந்ததே குற்றமா?
பெண்ணாகப் பிறந்ததே குற்றமா?