தண்டனை விகடன்
Published:Updated:

சரக்கு கொடுத்தால் சமாதானம்!

சரக்கு கொடுத்தால் சமாதானம்!


தண்டணை விகடன்  
சரக்கு கொடுத்தால் சமாதானம்!
சரக்கு கொடுத்தால் சமாதானம்!
சரக்கு கொடுத்தால் சமாதானம்!
ராமசாமி, மன்னர்மன்னன்,ஜெயவேல், நபீசா, அண்ணாமலைராஜா, கவிமணி
சரக்கு கொடுத்தால் சமாதானம்!
சரக்கு கொடுத்தால் சமாதானம்!

தோ சில தண்டனைத் துளிகள்...

அய்மன் நஜாபி, சார்வேயிட் இருவரும் இளம் காதல் ஜோடிகள். அய்மன், துபாயில் பணிபுரிகிறார். அவரைப் பார்க்க சார்வேயிட் துபாய் வந்திருந்தார். ஹோட்டலில் இருவரும் முத்தம் கொடுக்க, அருகே இருந்த ஒருவர் 'பொது இடத்தில் முத்தம் கொடுத்தது குற்றம்' என்று போலீஸ§க்குப் போய்விட்டார். பிறகென்ன... அந்நாட்டுச் சட்டப்படி இருவருக்கும் ஒரு வருடச் சிறைத் தண்டனையும், 1,000 திர்காம் அபராதமும் விதிக்கப்பட்டது!

கி.மு. 3370-ம் ஆண்டுகளில் எகிப்தில் ஒருவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டு வந்தால், குற்றவாளியின் உடலை அத்தனை துண்டுகளாக வெட்டிக் கொல்வார்கள். அட்டன் என்ற பெண்ணின் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டார். அவரது உடலைப் புதைத்தும் விட்டார்கள். அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததும், அழுகிய நிலையில் இருந்த பிணத்தைத் தோண்டிஎடுத்து, துண்டு துண்டாக வெட்டி தண்டனையை நிறைவேற்றினார்கள்!

சரக்கு கொடுத்தால் சமாதானம்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையைச் சுற்றியுள்ள தோட்டிகாடு, விளாரிகாடு, துவரப்பள்ளம், பள்ளகுழிபட்டி போன்ற மலைவாழ் கிராமங்களில், காதலித்தாலோ, கள்ள உறவு வைத்தாலோ ஊர்ப் பஞ்சாயத்து கூடும். மறு நாள் காலை தவறு செய்தவர், கேப்பை மாவில் களி செய்து, பன்றிக்கறியோடு பட்டைச் சாராயம் வாங்கி ஊருக்கே விருந்துவைக்க வேண்டும். அத்துடன் 101 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். விருந்து கொடுத்தால், பஞ்சாயத்து மன்னிப்பு கொடுக்கும். இல்லையென்றால், ஊரைவிட்டு விலக்கிவைத்துவிடுவார்கள்!

தனது சுதந்திர நாளில் கதறி அழுத ஒரே நாடு, சிங்கப்பூர். குடிநீர், வேலைவாய்ப்பு உட்பட தன் அனைத்துத் தேவைகளுக்கும் அதுவரை அண்டை நாடான மலேசியாவையே நம்பியிருந்தது சிங்கப்பூர். திடீரெனக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தைத் தண்டனையாகவே நினைத்தார்கள் சிங்கப்பூர்வாசிகள். இப்போது உலகின் மிக முக்கியச் சந்தையாக சிங்கப்பூர் வளர, அந்தச் சுதந்திரமே காரணமானது!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் குறைவான மதிப்பெண் எடுப்பவர்களைத் தண்டிக்க கேலியான ஒரு முறை கடைபிடிக்கப்பட்டது. 'குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் வகுப்பு நேரத்தில் ஒரு பேப்பர் தொப்பியை அணிய வேண்டும்' என்பதுதான் அந்த ஜாலி தண்டனை. தலைக்குச் சரியான அளவில் கட் செய்யப்பட்ட பேப்பர்கள், ஆரம்பத்தில் 'ஃபூல்ஸ் கேப் பேப்பர்' (முட்டாள் தொப்பித்தாள்) என்று அழைக்கப்பட்டது. அதுதான் இப்போது 'ஃபுல்ஸ்கேப் பேப்பர்' என்று அழைக்கப்படுகிறது!

சரக்கு கொடுத்தால் சமாதானம்!

அபார்ட்மென்ட் சிறுவர்களோடு அந்த மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனும் சேர்ந்து கிரிக்கெட் ஆடினான். 'சிக்ஸர் அடித்தால், பேட்ஸ்மேனே ஓடிப் போய் பந்தை எடுக்க வேண்டும்' என்று தண்டனை விதித்தார்கள். அந்தச் சிறுவனுக்கு அபார்ட்மென்ட்டைப் பார்க்க ஆசை. அவனது வலதுபுறத்தைவிட, இடது புறத்தில்தான் அபார்ட்மென்ட் நெருக்கமாக இருந்தது. அபார்ட்மென்ட்டைப் பார்க்கும் ஆசையில் இடது கை ஆட்டக்காரனாக மாறி, அடிக்கடி சிக்ஸர் அடித்து தண்டனை பெற்றான் அந்தச் சிறுவன். பின்னர், இந்தியாவின் சிறந்த இடது கை பேட்ஸ்மேனாக மாறிய அவரின் பெயர்... சவுரவ் கங்குலி!

சரக்கு கொடுத்தால் சமாதானம்!

அமெரிக்காவில் உடா மாகாணத்தில் முன்பு 'ஃபயரிங் ஸ்குவாட்' எனப்படும் துப்பாக்கி ஏந்திய காவலர்களைச் சுடவைத்து, மரண தண்டனை நிறைவேற்றினார்கள். சுடுபவர்களுக்கு மனசாட்சி சுடுமே? ஏதாவது ஒரு துப்பாக்கியில் மட்டும் டம்மி தோட்டா வைத்திருப்பார்கள். அது எந்தத் துப்பாக்கி என்று காவலர்களுக்குத் தெரியாது. சுட்டுக் கொன்றதும், 'நான் டம்மி தோட்டாவைத்தான் சுட்டேன்' என்று சுய சமாதானம் செய்துகொள்வார்கள் காவலர்கள்!

கள்ளிப்பால் ஊற்றி, பெண் குழந்தைகளைக் கொல்லும் கருத்தம்மாக்களைத் தெரியும். ஆண் குழந்தைகளைக் கொல்லும் 'பாப்புவா நியூ கினியா' என்ற பழங்குடி இனம்பற்றித் தெரியுமா? ஆஸ்திரேலியாவின் இந்தப் பழங்குடி இன ஆண்கள் எப்போதும், எதற்கும் பக்கத்துக் கிராமங்களுடன் மல்லுக்கு நிற்பார்கள். தொட்டதற்கு எல்லாம் குத்தம். எதை எடுத்தாலும் யுத்தம். 20 ஆண்டுகள் பிரச்னைகளைப் பார்த்துச் சலித்த கினியா இனப் பெண்கள், ஆண் வர்க்கத்துக்குத் தண்டனை தர முடிவு செய்தார்கள். தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டார்கள். 'ஆண்களாக இருப்பதால்தானே வீணாகச் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்' என்பது அவர்கள் முடிவு

சரக்கு கொடுத்தால் சமாதானம்!
சரக்கு கொடுத்தால் சமாதானம்!