Published:Updated:

'சட்ட' துரை!

'சட்ட' துரை!


தண்டணை விகடன்
'சட்ட' துரை!
'சட்ட' துரை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'சட்ட' துரை!
எம்.ஜி.பாஸ்கரராஜன்
'சட்ட' துரை!
'சட்ட' துரை!

லகில் முதன் முதலில் தண்டனைச் சட்டங்களைத் தோற்றுவித்த பெருமை மெசபடோமியா மன்னராக இருந்த ஹமுராபியைச் சேரும்.

கி.மு.1764-ல் அரியணை ஏறிய இவரது சட்டங்கள் இன்றளவும் பிரமிப்பூட்டும் உதாரணங்கள். இவரது சட்டத்தின்படி, ஒருவரை யாராவது அடித்தால் அபராதம் உண்டு. வி.ஐ.பி-யை அடித்தால், அதிக அபராதம்!

கற்பழிப்பு, கடத்தல், குழந்தைகளோடு உடலுறவுகொள்ளல், போர்க்களத்தில் பயந்து ஓடுவது, திருட்டு, வழிப்பறிக் கொள்ளை, நிர்வாகத்தில் லஞ்ச ஊழல் இதற் கெல்லாம் தலைவர் கொடுத்தது மரண தண்டனை. தவிர,

பாபிலோனியர்கள் பீர் குடிப்பதை மிக முக்கியச் சம்பிரதாயமாகக் கருதியதால், பீர் தயாரிப்பாளர்கள் தரம் குறைந்த பீர் தயாரித்தாலும் மரண தண்டனை அளிக்கப்பட்டது.

'சட்ட' துரை!

நடைமுறையில் அதிகம் பயன்படுத்தப்படும் An Eye for an eye, A Tooth for a tooth என்பது இவர் கொண்டுவந்ததுதான். இதன்படி பெற்றோரைக் கை நீட்டி மகன் அடித்தால், அடித்த இடத்திலேயே திருப்பி அடிப்பதுதான் அவனுக்குத் தண்டனை. ஒருவரை ஓங்கிக் குத்தி அவர் பல் உடைத்தால், பதிலுக்கு குத்தியவரின் பல் உடைக்கப்பட்டது. அலட்சியமாக ஆபரேஷன் செய்யப்பட்டு நோயாளி இறந்துபோனால், சர்ஜனின் விரல்கள் வெட்டப்பட்டன. அன்றாட வாழ்க்கை தொடர்பான சட்டங்களும் அப்போது நடை முறையில் இருந்தன.

'சட்ட' துரை!

வீடு கொள்ளையடிக்கப்பட்டு குறித்த காலத்துக்குள் காவலர்கள், திருடர்களைக் கைது செய்யா விட்டால், காவலர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு, திருடப்பட்ட தொகையை அரசாங்கமே அளிக் கும். மனித இனம் தோன்றி வளர்ச்சி அடைந்துகொண்டு இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சட்டங்கள் அனைத்தும் 1900-ல் அகழ்வாராய்ச்சியில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் கல்வெட்டு இப்போது பிரான்ஸின் உலகப் புகழ்பெற்ற லூவர் மியூஸியத்தில் உள்ளது!

'சட்ட' துரை!
'சட்ட' துரை!