Published:Updated:

திண்ணியம்... மறக்க முடியுமா?

திண்ணியம்... மறக்க முடியுமா?

திண்ணியம்... மறக்க முடியுமா?
தண்டணை விகடன்
திண்ணியம்... மறக்க முடியுமா?
.ஆர்.ஷஃபி முன்னா, யா.நபீசா,பவண்குமார்!
திண்ணியம்... மறக்க முடியுமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திண்ணியம்... மறக்க முடியுமா?

கோர்ட், விசாரணை, தீர்ப்பு எதுவும் இவர்கள் அகராதி யில் கிடையாது. நேரடியாக, தண்டனைதான்.

பஞ்சாயத்தைக் கூட்டி கொடூரமான தண்டனைகள் தரும் வழக்கம் வட இந்தியாவில் இன்னமும் முழுவீச்சில் இருக்கிறது. கஜியாபாத் கிராமப் பஞ்சாயத்து ஒன்றில் 15 வயதுப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததற்காக 40 வயது நபருக்கு வழங்கப்பட்ட தண்டனை, ஐந்து செருப்படிகள். முசாபர் நகரைச் சேர்ந்த ஃபர்சானா குரைஷி என்ற பெண், ஒருவருடன் ஓடிவிட்டார். அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்த சகோதரர் உஸ்மான் குரைஷி, பஞ்சாயத்து முன்பு நிறுத்தினார். பஞ்சாயத்து முடிவின்படி அந்தப் பெண்ணைக் கழுத்தை வெட்டிக் கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்தார்.ஹரியானாவின் பஞ்ச்குலா கிராமத்தில் ஷீனு என்ற பெண், வேற்று சமூகத்தைச் சேர்ந்த தேஜ்பாலை மணமுடித்த காரணத்துக்காக, பஞ்சாயத்துத் தீர்ப்பின்படி அவரது தந்தையால் எரித்துக் கொல்லப்பட்டார்.

திண்ணியம்... மறக்க முடியுமா?

'தமிழ்நாடு பரவாயில்லையே' என்று தோன்றலாம். திண்ணியம் நினைவு இருக்கிறதா? திருச்சிக்கு அருகே உள்ள இந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சுப்ரமணியனிடம் (இவர் ஓர் ஆசிரியர்) தொகுப்பு வீட்டுக்காக 2,000

திண்ணியம்... மறக்க முடியுமா?

ரூபாய் லஞ்சம் தந்தார் கருப்பையா என்ற தலித். பதவிக்காலம் முடியும் வரை வீடும் வரவில்லை. பணமும் வரவில்லை. பொறுத்துப் பார்த்த கருப்பையா, 'பணத்தைத் திரும்பத் தரவில்லை என்றால், நான் இனிமேல் வெட்டியான் வேலை பார்க்க மாட்டேன்' எனப் பறை அடித்து ஊர் முழுக்கச் சொன்னார். உடனே, அவர் கொடூரமாக அடித்து உதைக்கப் பட்டார். கருப்பையாவுடன் துணைக்குச் சென்ற ராமசாமி, முருகேசன் இருவரும் தங்களை 'வாத்தியார்' தேடுவதை அறிந்து பயந்துகொண்டு தாங்களாகவே 'சரணடைந்தார்கள்'. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் இருவருக்கும் சூடுபோட்ட 'ஆசிரியர்', ஊரின் மற்ற சிலரையும் அழைத்து அவர்களுக்குத் தண்டனை விதித்தார். 'நரகலைத் தின்னாத்தான்டா உங்களுக்குப் புத்தி வரும்' என்று ஊரே கூடி இருவரது வாயிலும் மனித மலத் தைக் கரைத்து ஊற்றியது. கொடுத்த லஞ்சப் பணத்தை திரும்பக் கேட்ட குற்றத்துக்காகத்தான் அவர்களுக்கு இந்தத் தண்டனை. விஷயம் வெளியில் வந்ததும், தலித்துகள் கோர்ட்டுக்குப் போனார்கள். தண்டனை என்ன தெரியுமா? 2,000 ரூபாய் அபராதம்!

திண்ணியம்... மறக்க முடியுமா?
திண்ணியம்... மறக்க முடியுமா?