Published:Updated:

நீங்கள் பாவியா?

நீங்கள் பாவியா?


தண்டணை விகடன்
நீங்கள் பாவியா?
நீங்கள் பாவியா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நீங்கள் பாவியா?
இரா.மன்னர்மன்னன்
நீங்கள் பாவியா?
நீங்கள் பாவியா?

வறு செய்தவன் தண்டனையை அனுபவிப்பதற்கான ஸ்பாட்... நரகம்!

எகிப்தியக் கடவுளான 'ஓசிரிஸ்'ஸைப் பின்பற்றுபவர்கள் 'இறப்புக்குப் பின் வாழ்க்கை' என்கிற கான்செப்டைக் கொண்டுவந்தார்கள்.

'இறப்புக்குப் பின் 42 தேவதைகள் நீதிபதிகளாக

இருந்து, நம் நன்மை - தீமைகளை ஆராய்வார்கள். பாவிகளின் ஆன்மா நரகத்தில் தூக்கி வீசப்படும். அங்கே தண்டனைகள் வழங்கப்படும். பின்னர், அந்த ஆன்மா அழிக்கப்படும்' என்று மதத் தலைவர்கள் சொன்னதைக் கேட்டு எகிப்தியர்கள் நடுங்கினர். பல மதங்கள் எகிப்தியர்களிடம் இருந்தே 'நரகம்' கான்செப்டை எடுத்துக்கொண்டதாக' வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்!

'மேலே சொர்க்கம். நடுவில் பூமி. கீழே நரகம் (டார்டாரஸ்)' என்று நம்பினார்கள் கிரேக்கர்கள். 'காற்றும் வெளிச்சமும் புக முடியாத இருட்டறை போன்ற இடம்' என்பதே டார்டாரஸின் வர்ணனையாக இருந்தது. 'பாவத்துக்கு ஏற்ப டார்டராஸில் மூச்சுத் திணறிக்கொண்டே இருக்க வேண்டும்' என்று பாவிகளைப் பயமுறுத்தினார்கள்!

நீங்கள் பாவியா?

'தண்டனை என்பது உடலை வருத்துவது அல்ல, மனதை வருத்துவது' என்ற அடிப்படை கொண்டவர்கள் யூதர்கள். அவர்களின் சொர்க்கம் - நரகம் எல்லாமே 'கெஹானா'தான்.

அங்கே ஆன்மாக்களுக்கு அவர்கள் செய்த நன்மைகள், தீமைகள் உணர்த்தப்படும். தீய ஆன்மாக்கள் வருந்தும். அதுதான் அதிகபட்சத் தண்டனை. கெஹானாவில் இருந்து வெளியேறும் ஆன்மா ஒன்று, இறைவனுடன் கலக்கலாம். இல்லை, மறுபிறவி எடுக்கலாம். 'மறுபிறவி என்பது மிகக் கொடுமையான தண்டனை' - என்கிறார்கள் யூதர்கள். யூதர்களில் ஒரு பிரிவினர் 'பாவிகள் நிச்சயம் 'சியோல்' என்ற நரகத்துக்குச் செல்வார்கள்' என்கிறார்கள்.

"நியாயத் தீர்ப்பு நாளில் கடவுள் வெள்ளைச் சிம்மாசனத்திலே அமர்ந்து தீர்ப்பு சொல்லுவார். பாவிகள் நரகம் சென்று, கடும் தண்டனைகள் அனுபவிப்பார்கள். கொடும் குற்றம் செய்தவர்கள், கடவுளை அடையவே முடியாத தொலைவுக்குத் தூக்கி எறியப்படுவார்கள். அவர்களது ஆன்மாக்கள் அநாதையாக அலையும். மீதம் உள்ள பரிசுத்த ஆன்மாக்களை ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்' என்கிறது கிறிஸ்துவம். 'இல்லை... ஒருநாள் ஆண்டவர், பேய்கள் உட்பட்ட அனைத்து உயிர்களையும் தம்முடன் இணைத்துக்கொள்வார்' என்று ஒரு சாரார் நம்புகிறார்கள்!

இஸ்லாம் மதம், சொர்க்கம் - நரகம்பற்றிய பல நீண்ட வரையறைகளைக்கொண்டது. இதில் நகரம் கடும் வெப்பம் நிறைந்த இடமாகச் சித்திரிக்கப்படுகிறது.

நீங்கள் பாவியா?

'அல்லாவுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதையும், அவனுக்கு இணை வைப்பதையும்' மிகப் பெரிய பாவமாக இஸ்லாம் சுட்டிக் காட்டுகிறது. இப்படிப்பட்ட பெரும் பாவத்தைச் செய்பவர்கள்தான் நரக நெருப்புக்கு எரிபொருளாக இருப்பார்களாம். 'நரக நெருப்பில் தோல் எரிய எரிய... புதிய தோல் உருவாகிக் கொண்டே இருக்கும். இதனால் எரியும் வேதனையை தொடர்ந்து உணர வேண்டியிருக்கும்' என்கிறது இஸ்லாம்.

'அவிசி'- புத்த மதம் காட்டும் நரகத்தின் பெயர் இது. இங்கே ஒருவனின் பாவம் தண்டனைகளால் சரிக்கட்டப்படும். அதுவரை அவன் வெளியே வர முடியாது. சுவைக்காக ஓர் உயிரைக் கொன்றவர்கள் அந்தப் பாவத்தைக் கழுவ அவிசியிலே தன் சதையைத் தானே தின்ன வேண்டியிருக்கும். பாவக் கணக்கைத் தீர்க்க முடியாதவர்கள், அவிசியிலேயே மீண்டும் பிறக்க வேண்டும்!

நீங்கள் பாவியா?

இந்து மதத்தின் எல்லா வேதங்களும் சாஸ்திரங்களும் நரகம்பற்றிய ஏதாவது ஒரு குறிப்புடன்தான் இருக்கிறது. நரக தண்டனைகளை விளக்கும் கருட புராணம் 'அந்நியன்' படப் புண்ணியத்தில் எல்லோருக்கும் தெரியும். இதில், நரகத்தின் காவலனான எமன்தான் உலகின் முதல் மனிதன். அதனாலேயே, மனிதர்களின் செயல்களைக் கணிக்கும் பொறுப்பு அவனிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது வேதம். எமன், நரகத்தின் காவலனாக இருந்தாலும், அவர் வசிப்பது என்னவோ சொர்க்கம்தான். 'ஒருவேளை நரகத்தில் மனிதர்கள் தங்களின் பாவக் கணக்கைத் தீர்க்காமல் போனால், மறு பிறவியிலும் அதற்கான தண்டனைகளை அனுபவிப்பர்' என்கிறது இந்து மதம்!

நீங்கள் பாவியா?
நீங்கள் பாவியா?