Published:Updated:

தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!

தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!


தண்டணை விகடன்
தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!
தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!
ந.வினோத்குமார், பா.ஜெயவேல்
தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!
தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!

னித குலத்தை எது ஒன்றுபடுத்துமோ, அதுவே நல்லது, மேலானது, அழகானது. எது பிரித்துச் சிதைக்குமோ, அது கேடானது, தவறானது, இழிவானது' என்றார் டால்ஸ்டாய். அப்படி ஒரு கேடான விஷயம் உலகில் உண்டு எனில், அது நீதியின் பெயரால் வழங்கப்படும் மரண தண்டனைதான்!

தண்டனை என்பது தவறு செய்தவரை நல்வழிப்படுத்தத்தான். மாறாக, உயிரைப்

பறிக்க அல்ல. 'எல்லாக் குற்றங்களையும் அப்படிச் சொல்ல முடியாது. கருணையற்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பது, குற்றம் செய்ய நினைப்பவர்களை ஆரம்பத்திலேயே தடுக்கும்' என்கிறார்கள் மரண தண்டனையை ஆதரிப்பவர்கள். இந்த வாதம் உண்மை எனில், 1947-ல் இருந்து இன்று வரை 4,300-க்கும் மேற்பட்ட தூக்குத் தண்டனைகள் நம் நாட்டில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக இந்தியச் சட்ட ஆணையகம் (Law Commission of India) தெரிவிக்கிறது. இத்தனைக்குப் பிறகும், நம் நாட்டில் குற்றங்கள் ஒழியவோ, குறையவோ இல்லையே?! சூழ்நிலையால் குற்றவாளிகளாக மாறுபவர்கள்தான் அதிகம். தீவிரவாத இயக்க இளைஞர்களின் செயல்களை நாம் நியாயப்படுத்த முடியாது. ஆனால், படிப்புக்கு ஏற்ற வேலை, அடிப்படை வசதிகள், உரிமைகள் ஆகியவை வழங்கப்படாததுதான் இளைஞர்கள் இத்தகைய தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைகிறது. இப்படி ஒருவர் சூழ்நிலையால் கொலை செய்தால் அது குற்றம்.

தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!

அதைச் சட்டமே செய்தால் அதற்குப் பெயர் தண்டனை. 'அதான்

தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!

கருணை மனு இருக்கிறதே' என சிலர் சொல்லக்கூடும். 1992 முதல் இன்று வரை சுமார் 29 கருணை மனுக்கள் ஜனாதிபதியின் மேஜையில் உறங்கிக்கொண்டு இருக்கின்றன. வாழ்வா... சாவா? சாவென்றால் இந்த நிமிடமா... அடுத்த நிமிடமா? விடை தெரியாத கேள்விகளுடன் கழிகிறது அவர்களின் ஒவ்வொரு நாளும்.

உலகில் 120 நாடுகளில் மரண தண்டனை அமலில் இல்லை.

தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!

அமலில் இருக்கும் 76 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உச்சநீதிமன்றம் 'அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கலாம்' என்று குறிப்பிட்டாலும் 'அரிதிலும் அரிதான' என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. 'சட்டம் ஓர் இருட்டறை' என்பார்கள். ஆனால், சட்டம் ஓர் பாழடைந்த கிணறு. அதனுள் போய்விட்டால் எத்தனை கத்தினாலும், உங்கள் குரலில் நீதியே இருந்தாலும் வெளியில் கேட்காது!

தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!
தூக்கு தண்டனையைத் தூக்கிலிடுவோம்!