Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆசிரியர்
தலையங்கம்

வழக்கு மொழி!

தலையங்கம்

மிழ் 'செம்மொழி' என்று மத்திய அரசைப் பிரகடனம் செய்ய வைப்பதில்கூடத் தமிழக அரசுக்கு அத்தனை சிரமங்கள் இருந்திருக்காது. ஆனால், நம் மாநில எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றங்களில் தமிழை 'வழக்கு மொழி'யாக ஆக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் இன்னமும் பலன் தரவில்லை. நீதிமன்ற விசாரணைகளைத் தமிழில் நடத்தக் கோருவது, வழக்கறிஞர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. இவர்களின் எஜமானர்களான வாதி-பிரதிவாதி என்கிற அடையாளத்தோடு இருக்கிற பொதுமக்களின் பிரச்னையும்கூட. காரணம், பொதுமக்களைப் பொறுத்தவரை வழக்கு என்பது வாழ்க்கை. வழக்கில் வைக்கப்படும் வாதங்கள் எந்த அளவுக்குச் சரியானவை அல்லது உண்மையானவை என்று தெரிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் நீதிபதிகளுக்குத் தமிழ் தெரியாதே என்றும் இதனால் சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பாதிப்பு வருமோ என்றும் சிலர் சந்தேகங்கள் கிளப்புகிறார்கள். இவற்றுக்கெல்லாம் தீர்வு கண்ட பிறகே தமிழை நீதிமன்றங்களின் வழக்கு மொழியாக ஆக்க முடியும் என்றால், அதற்கு மேலும் அதிக காலம் தேவைப்படலாம்.

அதனால், நமது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முதல் கட்டமாக - தமிழ் தெரிந்த நீதிபதிகள் செயலாற்றும் முனிசீஃப் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் துவங்கி உயர் நீதிமன்றம் வரை அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை வழக்கு மொழியாக ஆக்குவதில் சிரமங்கள் இருக்காது என்பதால், இதற்கான அடிப்படை வேலைகளை, சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் உடனடியாக ஆரம்பிக்கலாமே?

லத்தீன், சம்ஸ்கிருதம் எல்லாம்கூட செம்மொழிகள்தான். ஆனால், அவை வழக்கில் இல்லை. ஆனால், செம்மொழியான தமிழ் மொழி வழக்கில் இருக்கும் மொழி. இது வழக்கு மொழியாகவும் ஆகட்டுமே!

தலையங்கம்
தலையங்கம்