Published:Updated:

தேர்தல் முறையில் உடனடி சீர்திருத்தம் தேவை: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!

தேர்தல் முறையில் உடனடி சீர்திருத்தம் தேவை: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!
தேர்தல் முறையில் உடனடி சீர்திருத்தம் தேவை: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!
தேர்தல் முறையில் உடனடி சீர்திருத்தம் தேவை: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!

கொல்கத்தா: வெளிப்படைத்தன்மை, ஜனநாயக பொறுப்புணர்வு இருக்கும் வகையில் தேர்தல் முறையில் உடனடியாகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரக் ஒ பிரையன் கூறும்போது, ''நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்துவார்கள். இந்தக் கோரிக்கைக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போராடும்.

தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது. இதுதொடர்பாக மம்தா பானர்ஜி புத்தகமும் எழுதியுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ஒரு கட்சி, மிகப்பெரிய அளவில் பணத்தை வாரி இறைக்கிறது. இது அபாயகரமானது ஆகும். ஆரோக்கியமான ஜனநாயகத்தைதான் நாங்கள் விரும்புகிறோம். பணத்தை வாரி இறைக்கும் ஜனநாயகத்தை விரும்பவில்லை" என்றார்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் இதுகுறித்து கூறும்போது, ''வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும், ஜனநாயக பொறுப்பை நிறைவேற்றும் வகையிலும் தேர்தல் முறையில் உடனடியாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது' என்றார்.