Published:Updated:

சீக்கியர் படுகொலை பற்றி மீண்டும் விசாரிக்க மோடிக்கு பஞ்சாப் முதல்வர் கடிதம்!

விகடன் விமர்சனக்குழு

சண்டிகார்: சீக்கியர் படுகொலை பற்றி மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கடிதம் எழுதி உள்ளார்.

1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சீக்கியர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதில் பல வழக்குகள் போலீசாரால் முடித்து வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சீக்கியர் படுகொலையை மீண்டும் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ''1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிரோமணி அகாலி தளம் கட்சி போராடி வருகிறது.

இந்த வழக்கை ஆய்வு செய்த முன்னாள் நீதிபதி ஜி.பி.மாத்தூர் தலைமையிலான குழு, சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க பரிந்துரை செய்து 45 பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2 வழக்குகளில் காங்கிரஸ் தலைவர்கள் சஜ்ஜன்குமார் மற்றும் ஜெகதீஷ் டைட்லர் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறி உள்ளார்.