Published:Updated:

ஸ்ரீரங்கம் தேர்தல்: தி.மு.க.வினரை செல்போனில் உற்சாகப்படுத்திய ஸ்டாலின்!

விகடன் விமர்சனக்குழு
ஸ்ரீரங்கம் தேர்தல்: தி.மு.க.வினரை செல்போனில் உற்சாகப்படுத்திய ஸ்டாலின்!
ஸ்ரீரங்கம் தேர்தல்: தி.மு.க.வினரை செல்போனில் உற்சாகப்படுத்திய ஸ்டாலின்!
ஸ்ரீரங்கம் தேர்தல்: தி.மு.க.வினரை செல்போனில் உற்சாகப்படுத்திய ஸ்டாலின்!

திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தி.மு.க.வினரை மு.க.ஸ்டாலின் செல்போனில் பேசி உற்சாகப்படுத்தி உள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வருகின்ற 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் களம் இறக்கப்பட்டு தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் அ.தி.மு.க.வினருக்கு போட்டியாக சுழன்று வருகின்றனர்.

கடந்த மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், தேர்தல் பணிகளை சிறப்பாக செய்வது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வருகின்ற 9, 10, 11 ஆகிய 3 நாட்கள் மு.க.ஸ்டாலின் தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்ட உள்ளார்.

இந்நிலையில், நேற்று திடீரென மு.க.ஸ்டாலின் தேர்தல் பொறுப்பாளர்கள், பகுதி செயலாளர்கள் தி.மு.க. நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, ஸ்ரீரங்கம் தேர்தல் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது, என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் கருத்து கேட்டு ஆலோசனைகள் வழங்கி உள்ளார். மேலும், ஸ்ரீரங்கத்தில் தி.மு.க.வினர் ஆற்றி வரும் தேர்தல் பணிகளை வெகுவாக பாராட்டிய மு.க.ஸ்டாலின், தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்த உற்சாகமூட்டி இருக்கிறார்.