Published:Updated:

முன்னாள் முதல்வருக்கு பன்றிக் காய்ச்சல்:ராஜஸ்தானில் பரபரப்பு!

முன்னாள் முதல்வருக்கு பன்றிக் காய்ச்சல்:ராஜஸ்தானில் பரபரப்பு!
முன்னாள் முதல்வருக்கு பன்றிக் காய்ச்சல்:ராஜஸ்தானில் பரபரப்பு!
முன்னாள் முதல்வருக்கு பன்றிக் காய்ச்சல்:ராஜஸ்தானில் பரபரப்பு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகக்  காய்ச்சலில் அவதிப்பட்டு வந்த அவருக்கு, மருத்துவ பரிசோதனை செய்தபோது பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியானது. இருப்பினும் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், " பரிசோதனை செய்ததில் எனக்குப்  பன்றிக்காய்ச்சலுக்கு காரணமான எச்1என்1 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சை காரணமாக உடல்நலம் தேறி வருகிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை அம் மாநிலத்தில்  பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.