Published:Updated:

கிரண்பேடியிடம் சர்வாதிகார அணுகுமுறை: உதவியாளர் ராஜினாமா!

கிரண்பேடியிடம் சர்வாதிகார அணுகுமுறை: உதவியாளர் ராஜினாமா!
கிரண்பேடியிடம் சர்வாதிகார அணுகுமுறை: உதவியாளர் ராஜினாமா!
கிரண்பேடியிடம் சர்வாதிகார அணுகுமுறை: உதவியாளர் ராஜினாமா!

புதுடெல்லி: கிரண்பேடி சர்வாதிகார அணுகுமுறையை பின்பற்றுவதாகக் கூறி அவரது பிரசார உதவியாளர் நரேந்திர தண்டன் ராஜினாமா செய்துள்ளார்.

பா.ஜ.க.வின் முன்னாள் செயலாளர் நரேந்திர தண்டன். இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ.க.வின்  முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி அறிவிக்கப்பட்ட பின், அவரது பிரசார குழுவில் நரேந்திர தண்டனும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ''கிரண்பேடி சர்வாதிகார அணுமுறையை கடைபிடிக்கிறார். எனவே, அவருக்கு கீழ் பணியாற்றுவது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது'' எனக் கூறி நரேந்திர தண்டன் பா.ஜ.க.வில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை கட்சியின் மேலிடத்திலும் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பா.ஜ.க. தரப்பில், ''நரேந்திர தண்டன் விலகியதால் தேர்தல் பணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏற்கனவே, அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. கடந்த 2013 சட்டமன்றத் தேர்தலிலும் திமார்பூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக நரேந்திர தண்டனும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் கடந்த காலங்களில் அவர் பிரச்னையைதான் கொடுத்து வருகிறார்'' எனக் கூறப்பட்டுள்ளது.