Published:Updated:

ஹலோ போலீஸ்... சபாஷ் போலீஸ்!

ஹலோ போலீஸ்... சபாஷ் போலீஸ்!
ஹலோ போலீஸ்... சபாஷ் போலீஸ்!

''HELLO POLICE
83000 31100
ஹலோ போலீஸ்

‘போக்கிரித்தனம், பெண்களைக் கேலி செய்தல் மற்றும் சட்ட விரோத செயல்கள் பற்றி தொலைபேசி, SMS, WhatsApp  அல்லது sprmd.tn@nic.in என்ற மின் அஞ்சல் மூலம் எந்நேரமும் தகவல் அளிக்கலாம். தகவல் கொடுப்பவர், தங்களைப் பற்றிய விபரம் அளிக்கத் தேவை இல்லை. 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்து, விபரம் தெரிவிக்கப்படும்.’ -காவல் துறை கண்காணிப்பாளர், ராமநாதபுரம்.''

இப்படி ஒரு போர்டு தனுஷ்கோடி கடற்கரையில் நம்மை வெகுவாக ஈர்த்தது.

விசாரித்தால், மாவட்டம் முழுக்கவே பல இடங்களிலும் இத்தகைய போர்டுகளை அமைத்திருக்கிறது மாவட்ட காவல் துறை!

ஹலோ போலீஸ்... சபாஷ் போலீஸ்!

இதைப்பற்றி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் கேட்டபோது, ‘‘பொதுவாக, ஏதாவது பிரச்னை என்றால் அவசரத் தொடர்பு எண்ணான 100க்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் அடுத்த வெர்ஷனாகத்தான் இந்த ‘ஹலோ போலீஸ்’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்று அனைவரிடமும் அலைபேசி, ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான், சென்ற வருடம் டிசம்பர் 12ஆம் தேதி அன்று, மொபைல் மூலம் எளிமையாக காவல்துறையை அணுகக்கூடிய இந்த சேவையைத் தொடங்கினோம்.

வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். மூலமாக மட்டுமல்ல, வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் எங்களுக்கு அனுப்பலாம். அந்தப் புகாரை, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு, ஃபார்வேர்டு செய்வோம். நாங்கள் எடுத்த நடவடிக்கை குறித்த விவரங்களை, தகவல் கொடுத்தவர்களுக்கு 24 மணி நேரத்துக்குள் தெரிவிப்போம்.

கூடவே, எங்கள் மாவட்டத்தில் இருக்கும் 41 காவல் நிலையங்களிலும் 'ஆல்ஃபா பேட்ரோல்' (Alpha Patrol) என்ற பைக் பேட்ரோலையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு புகார் ஃபார்வேர்டு செய்யப்படுவதுடன், இந்த பைக் பேட்ரோல் குழுவும் அலாட் செய்யப்பட, புகார் குறித்து விசாரிக்க காவலர்கள் அனுப்பப்படுவார்கள். அந்த பைக்கில் வாக்கி டாக்கி, தூப்பாக்கி என அனைத்தும் இருக்கும். ஆரம்பித்த ஒரு மாதத்துக்குள், 640 புகார்களுக்கு மேல் பதிவாகியுள்ளன. சில புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தச் சேவைக்கு எங்கள் மாவட்டத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும், பெண்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இது குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் முயற்சியில் இருக்கிறோம்!’’ என்று சொல்லி முடித்தார் அக்கறையுடன்!

ஹலோ போலீஸுக்கு ஒரு சபாஷ்!

- கே. அபிநயா