Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்

சிறைச்சாலை என்பது சித்ரவதைக் கூடம் அல்ல... அது மனிதனைச் சிந்திக்கச் செய்து சீர்திருத்தும் இடம்!

ஆனால், சகல வசதிகளையும் அமைத்துக் கொடுத்து, குற்றவாளிகளை மேலும் குற்றம் செய்யத் தூண்டும் இடமாகவே இருக்கின்றன இப்போதைய மாமியார் வீடுகள்!

காசு இருந்தால் போதும்... கஞ்சா, அலைபேசி, கறிச் சாப்பாடு, மது என்று சகலத்தையும் கம்பிகளைத் தாண்டி உள்ளே கொண்டுவர முடியும் என்று தினவெடுத்த கைதிகளுக்குப் பாதை காட்டுவதே சிறைச்சாலையின் ஊழியர்கள்தான்.

அடிக்கடி சிறைகளில் சோதனை நடக்கிறது. அபின் உள்ளிட்ட லாகிரி வஸ்துக்களோடு, அபாயகரமான ஆயுதங்களும் கைப்பற்றப்படுகின்றன. அதிகாரிகளும் தாங்கள் கைப்பற்றிய பொருட்களைக் கடை பரப்பிவைத்து, 'அதைப் பிடித்தோம்... இதைப் பிடித்தோம் என்று தங்கள் சாதனையாகவே வர்ணிக்கிற கொடுமையும் அடிக்கடி அரங்கேறுகிறது.

இதெல்லாம்போக, பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், தற்கொலைகள், ரத்தக்களறி மோதல்கள் என்று திரைப்படங்களை மிஞ்சும் திகில் காட்சிகளுக்கும் சிறைகளில் பஞ்சமே இல்லை.

தவறு யார் மீது?

காக்கிகளின் கை அரிப்பு, கரை வேட்டிகளின் அத்துமீறிய செல்வாக்கு இரண்டுமாகக் கூட்டணி போட்டுத்தான் திருந்த வேண்டிய கைதிகளைத் திரும்பத் திரும்பக் கெடுக்கின்றன!

கட்டப்பட்ட உயர்ந்த மதிலுக்குள், தங்கள் கண்ணெதிரில் இருக்கும் கைதிகள் மத்தியிலேயே கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடியாமல் அரசு நிர்வாகம் முழி பிதுங்கினால், மதிலுக்கு வெளியே கட்டவிழ்ந்து திரியும் குற்றவாளிகளைக் கண்டறிந்து ஒடுக்கும் தகுதி அந்த நிர்வாகத்துக்கு இருப்பதாக மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?

 
தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism