Published:Updated:

ஆசிரியர்கள் நியமனம்: கருணாநிதி குற்றச்சாட்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆசிரியர்கள் நியமனம்: கருணாநிதி குற்றச்சாட்டு
ஆசிரியர்கள் நியமனம்: கருணாநிதி குற்றச்சாட்டு

ஆசிரியர்கள் நியமனம்: கருணாநிதி குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, செப்.14,2011

 

ஆசிரியர்கள் நியமனம்: கருணாநிதி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று முத்துக்குமரன் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், அரசு 33 ஆயிரம் ஆசிரியர்களை மட்டும் நியமிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது சரியல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி குறைகூறியுள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டே 1-வது முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டுள்ள அதிமுக அரசு மாணவர்கள் கல்வி விவகாரத்தில் அக்கறையற்ற தன்மையோடு நடந்துகொள்கிறது.

புத்தகங்களில் தவறு இருந்தால் அதனை அகற்றி விடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்ததை வைத்துக் கொண்டு தவறுகளைத் திருத்தாமல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தங்களுக்குப் பிடிக்காததையெல்லாம் கிழித்தனர். ஆனால் உண்மையான தவறுகளைத் திருத்தவில்லை.

பாடங்கள் அச்சிடுவதிலும், விநியோகிப்பதிலும் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இன்னும்கூட பல பள்ளிகளுக்குக் குறிப்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படாத நிலை உள்ளதாக பெற்றோர்கள் குமறுகின்றனர்.

காலாண்டு தேர்வுக்கு வினாத் தாளை எப்படி தயார் செய்வது என்பதில் குழப்பம் நிலவுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வழக்கமான தேதியில் நடத்தப்படுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

பாடங்களையே இப்போதுதான் நடத்த தொடங்குகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டப் பாடங்களை நடத்துவதற்குரிய பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படவில்லை. அதனால் கற்பிக்கும் பணி பெயரளவில்தான் இப்போது நடைபெறுகிறது.

ஆனால் அதற்குள் காலாண்டு தேர்வு செப்டம்பர் 22-முதல் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

முத்துக்குமரன் குழு செய்த அனைத்துப் பரிந்துரைகளையும் நாங்கள் நடைமுறைப்படுத்த போகிறோம் என்று அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரையைப் பற்றி இதுவரை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இதன்படி தமிழ்நாட்டில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். ஆனால் அரசு 33 ஆசிரியர்களை மட்டும் நியமிக்கப்போவதாக ஓர் அறிவிப்பில் கூறியுள்ளது. அது நடைமுறைக்கு வந்தால்தான் நிச்சயம்.

இந்த ஆசிரியர் நியமனங்களும் பதவி மூப்பு அடிப்படையிலா அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாகவாக என்பதை முதல்வரோ, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரோ இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த ஆண்டு முதல் ஆசிரியர் மாறுதல் செய்யப்படுவதிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கவுன்சலிங் நடத்தி ஒளிவு மறைவின்றி வெளிப்படையான முறையில் பணி மாறுதல்கள் நடந்தன.

ஆனால் வேண்டியவர்களுக்கு மட்டும் மாறுதல் போட்டு முடித்துவிட்டு, இப்போது கவுன்சலிங் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

பள்ளிகள் தொடங்கி மூன்று மாதங்களுக்கு பிறகு மாறுதல் பெற்று புதிய இடத்திற்கு குடும்பத்தோடு செல்வதற்கான வசதிகளை யாராவது ஏற்படுத்திக் கொள்ள முடியுமா? என்று கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு