Published:Updated:

மக்கள் ஒற்றுமைக்காக மோடி 3 நாள் உண்ணாவிரதம்!

மக்கள் ஒற்றுமைக்காக மோடி 3 நாள் உண்ணாவிரதம்!
மக்கள் ஒற்றுமைக்காக மோடி 3 நாள் உண்ணாவிரதம்!

மக்கள் ஒற்றுமைக்காக மோடி 3 நாள் உண்ணாவிரதம்!

அகமதாபாத், செப்.14,2011

மக்கள் ஒற்றுமைக்காக மோடி 3 நாள் உண்ணாவிரதம்!

குஜராத்தில் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்காக,3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி அறிவித்தார். ##~~##

இதுகுறித்து அவர் தமது மாநில மக்களுக்கு எழுதிய திறந்த மடலில், "குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கிறது.

2002-ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறைகளில் எனக்குத் தொடர்பு இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி ஏற்படுத்தப்பட்ட மோசமான சூழலுக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் முடிவு ஏற்பட்டிருக்கிறது.

குஜராத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மீதும் என் மீதும் அவதூறுப் பிரசாரம் செய்வதே நாகரிகம் என்பது போல் கருதி செயல்பட்டு வந்தனர்.
இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகாவது என் மீதான அவதூறு பிரசாரம் நிறுத்திக் கொள்ளப்படுமா என்பது தெரியவில்லை.

நமது நாட்டின் உண்மையான பலம் ஒற்றுமையிலும் நல்லிணக்கத்திலும்தான் இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு. இதைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக "சத்பாவன மிஷன்' என்கிற இயக்கத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன். அதன் ஒரு பகுதியாக வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 3 நாள்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறேன்.

இந்த உண்ணாவிரதத்தின் மூலம் குஜராத்தில் அமைதி, ஒருமைப்பாடும், நல்லிணக்கம் ஆகியவை வலுப்பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்று மோடி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

குஜராத் கலவர வழக்கில் மோடியைச் சேர்ப்பது குறித்து ஆமதாபாத் நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு