Published:Updated:

தனியார்துறையில் வேலை பெற தனி வெப்சைட்: அரசு

தனியார்துறையில் வேலை பெற தனி வெப்சைட்: அரசு

சென்னை, செப்.14,2011

இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக தனி இணையதளம் ஒன்று தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.##~~##

சட்டப்பேரவையில் இன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அத்துறை அமைச்சர் செல்லபாண்டியன், "ஆன்லைன் மூலம் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளதால், தனியார் நிறுவனங்கள் இந்த இணையதளத்தின் மூலம் மனித வள தேவையினை பூர்த்தி செய்துகொள்ளலாம்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழகத்தில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் தனியார் துறை பணி நியமன உதவி பிரிவுகள் தொடங்கப்படும். பதிவுபெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்," என்றார் அமைச்சர்.
 
கைத்தறி மற்றும் துணி நூல் துறை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அத்துறையின் அமைச்சர் ரமணா, "கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் அடிப்படை கூலியுடன் 10 விழுக்காடு கூலி உயர்த்தி வழங்கவும், கைத்தறி நெசவாளர்களுக்கான முதியோர் ஓய்வூதியத் தொகையை 400 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கான குடும்ப ஓய்வூதியத் தொகை 550 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்," என்றார்.

அடுத்த கட்டுரைக்கு