Published:Updated:

நேர்மையான அமைச்சரை மோடி மிரட்டினார்: முலாயம் சிங் பகிரங்க குற்றச்சாட்டு!

நேர்மையான அமைச்சரை மோடி மிரட்டினார்: முலாயம் சிங் பகிரங்க குற்றச்சாட்டு!
நேர்மையான அமைச்சரை மோடி மிரட்டினார்: முலாயம் சிங் பகிரங்க குற்றச்சாட்டு!
நேர்மையான அமைச்சரை மோடி மிரட்டினார்: முலாயம் சிங் பகிரங்க குற்றச்சாட்டு!

ஹர்தோய்: நேர்மையான ஒரு மத்திய அமைச்சரை, பதவியை விட்டு நீக்கி விடுவதாக பிரதமர் நரேந்திர மோடி மிரட்டினார் என்று முலாயம் சிங் யாதவ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம், ஹர்தோயில் நடைபெற்ற கூட்டத்தில் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசும்போது, ''பா.ஜ.க. தலைவர்களும், மோடியும் நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தனர். ஆனால், அதில் எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும், ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளிலேயே சமாஜ்வாதி கட்சி நிறைவேற்றி உள்ளது.

மோடி மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நேர்மையான அமைச்சர் ஒருவரை மோடி மிரட்டியுள்ளார். அந்த அமைச்சரை பதவியை விட்டு நீக்கிவிடுவேன் என எச்சரித்துள்ளார். இதுபோன்ற நிலை, சமாஜவாதி கட்சியில் இல்லை. எங்கள் கட்சியினர் அனைவருக்கும் சரிசமமாக மரியாதை அளிக்கப்படுகிறது.

கிராமங்களின் வளர்ச்சிக்கு உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கிராமங்கள் வளர்ச்சியடைந்தால்தான், மாநிலம் வளர்ச்சியடையும். பாதுகாப்புத் துறை அமைச்சராக நான் இருந்தபோது, சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனால், மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் கைகுலுக்கிய வேளையில், இந்தியப் பகுதியில் அந்நாட்டுப் படையினர் கூடாரமிட்டு தங்கினர்" என்று குற்றஞ்சாட்டினார்.