Published:Updated:

கட்சியில் இருந்து பீகார் முதல்வர் அதிரடி நீக்கம்!

விகடன் விமர்சனக்குழு
கட்சியில் இருந்து பீகார் முதல்வர் அதிரடி நீக்கம்!
கட்சியில் இருந்து பீகார் முதல்வர் அதிரடி நீக்கம்!
கட்சியில் இருந்து பீகார் முதல்வர் அதிரடி நீக்கம்!

பாட்னா: ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து பீகார் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் சரத் யாதவ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

பீகார் மாநில முதல்வராக பதவி வகிக்கும் ஜிதன் ராம் மன்ஜிக்கும், அவர் சார்ந்த ஐக்கிய ஜனதாதள கட்சி மேலிடத்துக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த 7ஆம் தேதி கட்சியின் தலைவர் சரத்யாதவ் கூட்டிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் மன்ஜி கலந்து கொள்ளவில்லை. எனினும் இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 111 எம்.எல்.ஏ.க்களில் 97 பேர் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேநாளில் அமைச்சரவையின் அவசர கூட்டத்தை கூட்டிய முதல்வர் மன்ஜி, மாநில சட்டசபையை கலைக்கும்படி ஆளுநருக்கு சிபாரிசு செய்தார். எனினும், இந்த கூட்டத்தில் அவருடைய ஆதரவு அமைச்சர்கள் 7 பேர் மட்டுமே சட்டசபையை கலைக்க ஆதரவு தெரிவித்தனர். சரத் யாதவ் ஆதரவாளர்களான 21 அமைச்சர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கட்சியில் இருந்து பீகார் முதல்வர் அதிரடி நீக்கம்!

இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதல்வர் ஜித்தன்ராம் மன்ஜி கலந்து கொண்டார். பின்னர் மாலையில் பிரதமர் மோடியை சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பீகார் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்ஜியிடம், பீகார் அரசியலில் ஏற்பட்டு உள்ள நெருக்கடி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மன்ஜி, முதல்வர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் எனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அதை சட்டசபையில் வரும் 20ஆம் தேதி நிரூபிப்பேன். ஒருவேளை சட்டசபையில் என்னால் பலத்தை நிரூபிக்க முடியவில்லை என்றால் மட்டுமே முதல்வர் பதவியில் இருந்து விலகுவேன்" என்று கூறியிருந்தார்.

கட்சியில் இருந்து பீகார் முதல்வர் அதிரடி நீக்கம்!

இந்நிலையில், முதல்வர் பதவியில் இருந்து விலக முடியாது என்று மன்ஜி அறிவித்ததைத் தொடர்ந்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, கட்சித் தலைவர் சரத் யாதவ் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கையில் மன்ஜி ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத்யாதவ் கூட்டிய எல்.எல்.ஏ.க்கள் கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக ஜித்தன்ராம் மன்ஜியின் ஆதரவு எம்.எல்.ஏ.வான ராஜேஷ்வர் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க தலைவர்களின் ஒருவரான ஷா நவாஸ் உசேன், விரக்தி காரணமாகவே மன்ஜியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக நிதிஷ்குமார் மீது குற்றம்சாட்டியுள்ளார்.