Published:Updated:

அன்புமணிக்கு எதிரான குற்றப்பத்திரிகை ரத்து!

அன்புமணிக்கு எதிரான குற்றப்பத்திரிகை ரத்து!
அன்புமணிக்கு எதிரான குற்றப்பத்திரிகை ரத்து!
அன்புமணிக்கு எதிரான குற்றப்பத்திரிகை ரத்து!

சென்னை: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில், பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கடந்த 2013ஆம் ஆண்டு காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் பாமகவினர் காரில் வந்தனர். அன்புமணி கார் உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடி அருகே வந்தபோது சுங்க வரியை கேட்டுள்ளனர் அங்கிருந்த ஊழியர்கள். இதனால், ஆத்திரம் அடைந்த பாமகவினர் சுங்கச்சாவடியை அடித்து உடைத்ததுடன் ஊழியர்களையும் தாக்கினர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் தொடர்பாக அன்புமணி உள்ளபட பாமகவினர் மீது உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அன்புமணி பிப்ரவரி 10ஆம் தேதி (நாளை) ஆஜராக வேண்டும் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சுங்கச்சாவடியை தாக்கியதாக காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அன்புமணிக்கு எதிராக காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டது.