Published:Updated:

'உண்மை நீதிக்கு கிடைத்த வெற்றி': சொல்கிறார் அன்புமணி!

'உண்மை நீதிக்கு கிடைத்த வெற்றி': சொல்கிறார் அன்புமணி!
'உண்மை நீதிக்கு கிடைத்த வெற்றி': சொல்கிறார் அன்புமணி!
'உண்மை நீதிக்கு கிடைத்த வெற்றி': சொல்கிறார் அன்புமணி!

சென்னை: சுங்கச் சாவடி தாக்கப்பட்ட விவகாரத்தில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உண்மை, நீதிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், " விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியை தாக்கியதாக என் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதை உண்மை, நேர்மை மற்றும் நீதிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாத பொய் வழக்கு ஆகும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து கொண்டிருக்கிறது. கொலைகளும், கொள்ளைகளும் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு குற்றங்கள் பெருகிவிட்டன. தினமும் குறைந்தது 5 கொலைகளும், 50 கொள்ளைகளும் நடக்கின்றன. இதையெல்லாம் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், ஆட்சியாளர்களின் பழிவாங்கும் உணர்வுக்கு தீனி போடும் வகையில் என் மீது பொய்வழக்கு பதிவு செய்து கொடுமைப்படுத்தினார்கள்.

அரசியல் எதிரிகள் எப்படியெல்லாம் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு தான் சிறந்த உதாரணம் ஆகும். என் மீது பொய்வழக்கு தொடரப்படுவதற்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு சட்டப்படி  நடவடிக்கை எடுக்க வேண்டும்"  என்று வலியுறுத்தியுள்ளார்.