Published:Updated:

பீகார்: ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்; ரகசிய வாக்கெடுப்புக்கு மன்ஜி வலியுறுத்தல்!

பீகார்: ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்; ரகசிய வாக்கெடுப்புக்கு மன்ஜி வலியுறுத்தல்!
பீகார்: ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்; ரகசிய வாக்கெடுப்புக்கு மன்ஜி வலியுறுத்தல்!
பீகார்: ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்; ரகசிய வாக்கெடுப்புக்கு மன்ஜி வலியுறுத்தல்!

பாட்னா: பீகார் முதல்வராக இருக்கும் ஜிதன் ராம் மன்ஜியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து, ஆளுநரை சந்தித்து முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

பீகார் முதல்வராக பதவி வகிக்கும் ஜிதன் ராம் மன்ஜிக்கும், அவர் சார்ந்த ஐக்கிய ஜனதாதள கட்சி மேலிடத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை இன்று கட்சியில் இருந்து நீக்கினார் கட்சித்தலைவரான சரத் யாதவ்.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார், ஆளுநர் கேசரி நாத் திரிபாதியை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, 16 மணியில் இருந்து 20 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும், வேறு எந்த கட்சி்க்கும் அழைப்பு விடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆளுநர் உடனான சந்திப்பின்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சதானந்த் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் தம்மை ஆதரிக்கும் 130 எம்.எல்.ஏ.க்கள், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. அணி வகுப்பை ஆளுநர் முன்னிலையில் நடத்தி காட்டினார் நிதிஷ்குமார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஜிதன் ராம் வலியுறுத்தல்

இதனிடையே, ஜிதன் ராம் மன்ஜியை அழைத்த ஆளுநர், அவரது கருத்தை கேட்டறிந்தார். அப்போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், பெரும்பான்மையை வருகிற 19, 20 அல்லது 23 ஆகிய ஏதாவது ஒரு தேதியில் நிரூபிக்க தாம் தயாராக உள்ளதாகவும் ஆளுநரிடம் தாம் கூறியதாக, சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிதன் ராம் தெரிவித்தார்.

மேலும் நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும் அவர் கூறினார்.