Published:Updated:

உடல் நலம் தேறினார் தா.பாண்டியன்!

உடல் நலம் தேறினார் தா.பாண்டியன்!
உடல் நலம் தேறினார் தா.பாண்டியன்!
உடல் நலம் தேறினார் தா.பாண்டியன்!

சென்னை:  திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் உடல் நலம் தேறினார்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நேற்று( ஞாயிறு) திருச்சிக்கு ரயில் மூலம் வந்தார்.அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சளிக் காய்ச்சல் ஏற்பட்டது கண்டறியப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடல் நலம் தேறியுள்ளார்.
இந்நிலையில் இன்று (திங்கள்) சென்னைக்கு வந்த தா.பாண்டியனுக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. உடல்நலம் தேறியதையடுத்து நாளை முதல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் தகவல் தெரிவிக்கின்றனர்.