Published:Updated:

தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை: திருமா

தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை: திருமா
தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை: திருமா

சென்னை, செப்.16,2011

தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை: திருமா

தமிழகத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இப்பிரச்னைக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ##~~##

பரமக்குடி போலீஸ் துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தும், இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரியும் சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சென்னை - சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், "பரமக்குடியில் அப்பாவி தலித் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது திட்டமிட்டு நடத்திய தாக்குதலாகும்.

தமிழக அரசு அறிவித்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடத்துவது நம்பிக்கை கிடையாது. இதனால், உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
 
தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றால், இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அரசு விழாவாக நடத்த வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்டஈடு போதுமானதாக இல்லை. கூடுதலாக வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்க வேண்டும்," என்றார் திருமாவளவன்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், வன்னி அரசு, வெற்றிச் செல்வன், சுப வீரபாண்டியன், விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.