Published:Updated:

2ஜி: ராசா, கனிமொழி, சரத்குமார் ஜாமீன் கோரி மனு

2ஜி: ராசா, கனிமொழி, சரத்குமார் ஜாமீன் கோரி மனு
2ஜி: ராசா, கனிமொழி, சரத்குமார் ஜாமீன் கோரி மனு

புதுடெல்லி, செப்.16,2011

2ஜி: ராசா, கனிமொழி, சரத்குமார் ஜாமீன் கோரி மனு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ##~~##

இம்முவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் உள்பட இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மாத காலமாக வாதம் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது குறித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.