மனம் மரத்த மரண வியாபாரிகள்!

ஆராய்ச்சிக்கூடத்தைவிட்டு மருத்துவமனைக்கு ஒரு புதிய மருந்து வந்து சேரக் குறைந்தது 10 வருடங்களாவது ஆகின்றன. எலி, குரங்கில் தொடங்கி... மனிதர்கள் வரை பலரிடம் சோதிக்கப்பட்டு, உரிய சான்றிதழ் பெற்ற பிறகே மருந்துக் கடைக்குள் நுழையும் தகுதியைப் பெறுகிறது. நோயைக் குணப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படும் மருந்து, நோயைவிடக் கொடிய விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வுதான் இந்தக் கட்டுப்பாடுகளுக்குக் காரணம்!

ஆனால், உறக்கத்தில் இருப்பவனின் உறுப்பையே உருவி எடுத்து விற்றுப் பிழைக்கிற காலமல்லவா இது!

சென்னை கொடுங்கையூரில் குப்பை கொட்டும் இடத்தில் தனியார் மருத்துவமனைகளும் ஒருசில மருந்துக் கடைகளும் காலாவதியான மருந்துகளைக் கொட்டிக் குவிக்க... 'இதையெல்லாம் முற்றாக அழிக்காமல் இப்படிக் கொட்ட அனுமதிக்கலாமா?' என்று அரசாங்கமும் கவனிக்காமலே இருக்க... அந்தக் காலாவதி மருந்துகளையே புதிதுபோல உறை மாற்றி, மருந்துக் கடைகளுக்கு விற்றுக் காசாக்கியிருக்கிறது, துளியும் இரக்கமற்ற ஒரு கூட்டம்!

இவர்களின் நாசகாரச் செயலால் இதுவரை எத்தனை உயிர்கள் பறிபோயினவோ? எத்தனை பேர் பார்வை இழந்தார்களோ? யாரெல்லாம் மீண்டும் எழவே முடியாமல் நிரந்தர முடமாகினார்களோ? யார் தருவார் அந்தக் கணக்கு?

குப்பையில் இருந்து மருந்தை எடுத்து விற்றவர்கள் மட்டுமல்ல... அதற்குப் புதிது போலவே உறை மாட்டி ஒப்பனை செய்தவர்கள், அதிக லாபத்துக்காக அதை வாங்கி மக்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் விற்ற கடைக்காரர்கள், இந்த விற்பனையின் பல்வேறு கட்டங்களில் இடம்பிடித்த இடைத்தரகர்கள், இப்படி ஒரு குற்றம் நடக்கிறது என்று தெரிந்தும் தெரியாததுபோலக் கண் மூடியிருந்த அதிகாரிகள்... இப்படி ஆக்டோபஸாக அத்தனை திசைகளிலும் நீளும் குற்றக் கரங்களைத் தேடிப் பிடித்து வெட்டியெறிய வேண்டாமா?

உஷார்! நாளையே நெஞ்சுவலிக்காக மருத்துவமனை போகிற ஒரு அமைச்சருக்கோ, அதிகாரிக்கோ செலுத்தும் மருந்திலும்கூட இப்படியரு போலி கலந்திருக்கக்கூடும்!