ப.திருமாவேலன்,படங்கள்: கே.ராஜசேகரன், வி.செந்தில்குமார்

''விரும்பியதைச் செய்தால் வயது ஏறாது!''

நேரு பிரதமராக இருந்தபோது நடந்த சம்பவம் இது!

சீனா சென்று வந்திருந்த இந்திய எம்.பி-க்கள் குழுவுக்கு வரவேற்பு தரும் விழாவில், '50 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் யார் பெயர் அதிகமாக நினைவுகூரப்படும்?' என்ற கேள்வி எழுந்தது. ஒவ்வொரு எம்.பி-யும் ஒவ்வொரு பெயரைச் சொன்னார்கள். நம் மாநிலத்தில் இருந்து சென்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி-யான கே.டி.கே. தங்கமணி, ''காந்தியின் பெயர்தான் அதிகமாக நினைவில் நிற்கும்''

என்றார். அப்போது குறுக்கிட்ட பிரதமர் நேரு, ''உங்கள் ஊரைச் சேர்ந்த பெரியார் ஈ.வெ.ரா. பெயர்தான் அதிகமாக நினைவுகூரப்படும்'' என்றார்.

பண்டிதர் வாக்கு பொய்க்கவில்லை. தமிழ்நாட்டில் பெரியாரின்எழுத்துக்களைப் புத்தகமாகப் போடுவதற்கு இருக்கும் போட்டி மாதிரி வேறு யாருக்கும் நடந்தது இல்லை. நாட்டுடமை ஆக்கச் சொல்லி நாலாபுறமும் கோரிக்கைகள். நீதிமன்றத்தில் நீண்ட விவாதமாக நடந்துகொண்டு இருக்கும் நிலையில், சுமார் 10 ஆயிரம் பக்கங்களுடன் வந்து குதித்திருக்கிறார் ஆனைமுத்து. சரியாகச் சொன்னால், 9,300 பக்கங்களில் பெரியார் பேசியவை, எழுதியவை அனைத்தையும் 20 தொகுதிகளாக ஒருமுகப்படுத்தி, ஒரே நேரத்தில் கொண்டுவந்துவிட்டார் ஆனைமுத்து.

'பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்' என்ற புத்தகத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பே ஆனைமுத்து தொகுக்க, அதை வெளியிட்டவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. இன்றும் அவர்தான் இந்த 20 தொகுதிகளையும் வெளியிட்டு இருக்கிறார். ''பெரியார் உயிரோடு இருக்கும்போதே அவர் பேச்சு, எழுத்துக்களை எழுதி கையெழுத்துப்படிகளாக நான் அவரிடம் கொடுத்தேன். அவை மொத்தம் 3,222 பக்கங்கள். ஆறு மாதங்கள் இரவு பகல் பாராமல் அதைப் படித்துப் பார்த்த ஐயா, முக்கியமான 500 பக்கங்களில் தனது கையெழுத்தையும் பொறித்தார். திருச்சி சிந்தனையாளர் கழகத்துக்கு இது பதிப்புரிமை என்று எழுதினார். பெரியார் என்று சொன்னால் எடுத்துக்காட்ட முழுமையான தொகுப்பாக அந்த மூன்று புத்தகங்களும் இருந்தன. இன்று அதன் விரிவுபடுத்தப்பட்ட பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறேன். அன்றைக்கு வெளியிடும்போது கடன் வாங்கி வெளியிட வேண்டியிருந்தது. ஆனால், இன்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், முன் பணம் செலுத்தி புத்தகத்தை வெளியிடத் தூண்டுதலாக இருந்தது ஐயாவின் தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி!'' என்ற முன்னுரையுடன் தொடங்கிய ஆனைமுத்து, தொடர்ந்து சொன்னார்...

''பெரியவர்கள், தத்துவ மேதைகள், தலைவர்கள் என உலக வரலாற்றில் வலம் வந்தவர்கள் அனைவரும் குறிப்பிட்ட சில துறைகளைப்பற்றி மட்டும்தான் அக்கறைப்பட்டு இருப்பார்கள். அதுபற்றித்தான் அதிகம் பேசியிருப்பார்கள். ஆனால், பெரியார் மட்டும்தான் 70 துறைகளைப்பற்றி சிந்தித்து இருக்கிறார். பேசியிருக்கிறார். எழுதியிருக்கிறார். அவை தொடர்பான நூதன ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார். கடவுள் இல்லை என்று சொன்னவராக மட்டுமே அவரைச் சொல்வது, அவரது ஆளுமையைச் சுருக்குவதாகும். குழந்தை பிறக்க, ஆண் - பெண் சேர்க்கை தேவை இல்லை என்று இந்தியாவில் முதன்முதலில் பேசியவர் அவர்தான். ஒரு சோதனைக் குழாயில் குழந்தை வளர்வது போன்ற படத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்ட சமூக விஞ்ஞானி பெரியார். அதனால்தான் அவரது எழுத்துக்கள் காலங்கள் கடந்தும் பேசப்படுகின்றன.

அவருக்கு இணையாக உலக அளவில் இங்கர்சால், பெட்ரண்ட் ரஸல்ஸ் ஆகிய இருவரைத்தான் சொல்ல முடியும். இங்கர்சால் ஒரு கூட்டம் பேச, அதிக அளவில் பணம் கேட்பார். எனவே, பணக்காரர்களால்தான் அவரைவைத்துக் கூட்டம் நடத்த முடியும். ரஸல்ஸ், கணித விஞ்ஞானி. அவரது பேச்சு, மிகப் படித்தவர்களுக்குத்தான் புரியும். ஆனால், பெரியாரோ சாமான்யர்களுக்கும் புரியும் மொழியில் எளிமையான வாழ்க்கைமுறையால் பிரசாரம் செய்தவர். ஒரு ஆண்டுக்கு 150 நாட்கள் பயணம் என மொத்தம் 51 ஆண்டுகள் தமிழகத்தைச் சுற்றி வந்தார். அப்படி அலைந்தவர் உலக வரலாற்றில் எவரும் இல்லை. அதனால்தான் இன்று பெரியவர்களைவிட இளைஞர்கள் அதிகம் விரும்பும் தலைவராக அவர் கருதப்படுகிறார்!'' என்று வார்த்தைகளைக் கொட்டும் ஆனைமுத்துவுக்கு வயது 85.
புத்தக வெளியீட்டு விழாவில், ''எலும்பும் தோலுமாக இருக்கிறார் ஆனைமுத்து. ஆனால், இரும்பு நெஞ்சம் படைத்தவர்'' என்று முதல்வர் கருணாநிதி பாராட்டுப் பத்திரம் வாசித்தபோது, அரங்கம் அதிரக் கைத்தட்டல்கள். ''அடுத்த ஆண்டு இதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்கொண்ட ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்

போகிறேன். அதற்கு அடுத்த ஆண்டு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றின் நான்கு பாகங்களை நானே எழுதி வெளியிடப்போகிறேன். என்னால் முடியும் என்ற திமிரால் சொல்லவில்லை. நம்பிக்கையால் சொல்கிறேன்'' என்று பெரிய காரியங்களைச் சர்வசாதாரணமாகச் சொன்ன ஆனைமுத்துவிடம் ''இந்த வயதிலும் இவ்வளவு பரபரப்பு, சுறுசுறுப்பு எப்படி?'' என்று கேட்டேன்.

''நான் எந்தக் காயகல்பமும் சாப்பிடவில்லை. என்னுடைய எடை 40 கிலோதான். ஆனால் 20 கிலோ புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு பஸ்ஸில் பயணம் போவேன். 60 ஆண்டுகளாகத் தினமும் அதிக தூரம் நடக்கிறேன். நான் நடக்கும்போது நீங்கள் ஓடி வந்துதான் பிடிக்க வேண்டும். அவ்வளவு வேகமாகப் போவேன். அந்தப் பழக்கம்தான் என்னை உற்சாகப்படுத்துகிறது. இன்னொன்றையும் சொல்கிறேன்... எது உங்களுக்கு விருப்பமான வேலையோ, அதைப் பார்த்துக்கொண்டே இருங்கள். வயது கூடவே கூடாது. உற்சாகம் குறையவே குறையாது!''
இது பெரியவர் வாக்கு!