Published:Updated:

ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் தளமாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி

ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் தளமாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி
News
ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் தளமாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி

ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் தளமாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி

ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் தளமாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி

பெங்களூரு: ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் தளமாக இந்தியா மாற வேண்டும் என்று விமான கண்காட்சி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் 10வது “ஏரோ இந்தியா-2015” என்ற விமான கண்காட்சி தொடக்க விழா பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விமான கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியபோது, ''இந்த கண்காட்சியில் 350 இந்திய நிறுவனங்கள் மற்றும் 300 வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இது ஒரு மிகப்பெரிய விமான கண்காட்சி ஆகும்.

ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது, இது சரியல்ல. பாதுகாப்பு துறையில் உள்ள சவால்கள் மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு உள்ள நமது பொறுப்பை நாம் நன்றாக உணர்ந்து உள்ளோம். 100 கோடிக்கும் அதிக மக்கள் வாழும் இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வது நமது பொறுப்பு ஆகும். நாம் வெளிநாடுகளில் இருந்து 60 சதவீத ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்கிறோம். இந்த இறக்குமதியை நாம் குறைக்க வேண்டும். ராணுவ தளவாடங்களை நாம் அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும்.

இந்த சர்வதேச விமான கண்காட்சியை பாதுகாப்பு தளவாட உற்பத்தியை பெருக்குவதற்கான களமாக நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ராணுவ தளவாட உற்பத்தியை பெருக்கினால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். முதலீடுகள் அதிகரிக்கும். வணிகம் மேம்படும். நல்ல தொழில் வளர்ச்சி ஏற்படும். இந்தியாவில் ராணுவ உற்பத்தி தொழில் என்பது மிகவும் சிறியதாக உள்ளது.

ராணுவ உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதுமையை புகுத்துதலை அதிகரிக்க வேண்டும். இது இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் (மேக் இன் இந்தியா) திட்டத்துக்கு உதவியாக இருக்கும். இதற்காக ராணுவ உற்பத்தி மற்றும் கொள்முதல் கொள்கையில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. ராணுவ தளவாட உற்பத்தியிலும், ஆராய்ச்சியிலும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.

இந்தியாவில் ராணுவ உற்பத்தியை அதிகரித்து இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதில் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு, தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் பங்கேற்கலாம். ராணுவ உற்பத்தியை அதிகரிக்க அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். ராணுவ தளவாடங்களை 3வது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தளமாக இந்தியா மாற வேண்டும்" என்றார்.