இணைப்பு : ஜெயில் விகடன்

மனித உரிமை கிலோ எவ்வளவு?

உலகுக்கு மனித உரிமையின் மகத்துவத்தைப் போதிக்கும் அமெரிக்காவின் லட்சணம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்குச் சாட்சி, குவான்டனாமோ சிறைச்சாலை!

2001-ல் ஆப்கானிஸ்தானில் யுத்தம் நடத்திய அமெரிக்கா, போர்க் கைதிகளை அடைத்துவைப்பதற்காக கியூப வளைகுடாப் பகுதியில் தொடங்கிய ரகசியச் சிறைச்சாலைதான் குவான்டனாமோ. சுமார் 800 பேர் அங்கு அடைத்துவைக்கப்பட்டு இருந்தனர். தூங்கவிடாமல் அடிப்பது, நிர்வாணப்படுத்தி நாய்களை விட்டுக்

கடிக்கவிடுவது, பல நாட்கள் பட்டினி போடுவது, நாற்றம் அடிக்கும் கழிவுகளில் போட்டுவைப்பது என அனைவரின் மீதும் மிக மோசமான சித்ரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. குவான்டனாமோ சிறைக்குச் செல்லும் அமெரிக்க அதிகாரிகளுக்குச் சித்ரவதை முறைகள்பற்றி சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், கொரிய யுத்தத்தின்போது சீன கம்யூனிஸ்ட்டுகள் கையாண்ட சித்ரவதை முறைகள்தான் அந்தப் பயிற்சி வகுப்புகளில் சொல்லித் தரப்பட்டதாகவும் 'இன்டர்நேஷனல் ஹெரால்டு ட்ரிப்யூன்' பத்திரிகை எழுதியது.

சித்ரவதையில் செத்துப் போனவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் எனக் கணக்கற்ற மரணங்கள் உலகத்தின் கண்களுக்குத்தெரியாமல் மறைக்கப்பட்டன. செய்தி வெளியே கசிந்து, உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் கண்டித்தும்கூட 400 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வெளியே வந்த மெஹ்தி கெஸாலி என்ற கைதி, தனக்கு நேர்ந்த சித்ரவதைகளை விவரித்தபோது, உலகம் அதிர்ந்தது. இன்னொரு கைதியான ஓமர் தெகாயஸ் என்பவரின் கண்கள் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்து அவர் குருடாக்கப்பட்டு இருந்தார். சிகரெட்டால் சுடுவது, முள் கம்பிகளால் அடிப்பது, உடைந்த கண்ணாடிச் சில்லுகளின் மீது உருட்டுவது என ஒவ்வொன்றும் நினைத்துப் பார்க்கவே முடியாத கொடூரங்கள். 'பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற பெயரில், புஷ் நிர்வாகம் செய்த மனித உரிமை மீறல்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவார்' என்று உலகம் ஒபாமாவை நம்பியது. தேர்தல் பிரசாரத்தில்கூட ஒபாமா இதைத்தான் சொன்னார். ஆனால், குவான்டனாமோ மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், டிகோ கார்ஸியா, ஜோர்டான், பாகிஸ்தான், தாய்லாந்து, கிழக்கு ஐரோப்பா எனப் பல நாடுகளிலும் அமெரிக்கா நடத்தும் ரகசியச் சிறைச்சாலைகள் செயல்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன!

-இரா.கோகுல் ரமணன்