இணைப்பு : ஜெயில் விகடன்

தப்பு செய்... தப்பிச் செல்!

சிறையில் இருந்து தப்பிப்பது ஒரு கலை. சில 'கலை'ஞர்கள்பற்றிப் பார்ப்போமா? 16-ம் நூற்றாண்டில் ஜான் ஜெரார்ட் என்கிற மதபோதகர் மரண தண்டனை பெற்றார். ஆரஞ்சுப் பழச் சாற்றில் இருந்து தானே ஒரு மையை உருவாக்கி, நண்பர்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி ரகசியக் கடிதம் எழுதினார். ஜானின் திட்டப்படி நண்பர்கள் சிறை அகழி வரை படகைக் கொண்டுவர, பார்ட்டி எஸ்கேப்.

1930-களில் அமெரிக்காவில் பிரபல கேடியான ஜான்

டிலிஞ்சரைச் சிறையில் அடைத்தது போலீஸ். சோப்புக் கட்டியைவைத்தே ஒரு பொய்த் துப்பாக்கியை உருவாக்கி காவலர்களை மிரட்டி, ஆயுதங்களைப் பறித்துத் தப்பினான் டிலிஞ்சர். போகிற வழியில் ஷெரீஃபின் ஃபோர்டு காரைத் திருடும்போது மாட்டிக்கொண்டான்.

1753-ல் கியாகோமா கேஸனோவா என்ற எழுத்தாளர் மதக் கட்டுப்பாடுகளை மீறியதாக ஐந்து வருடச் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, வெனிஸில் உள்ள லீட்ஸ் சிறைக்கு அனுப்பப்பட்டார். வாக்கிங் போகும்போது மார்பிள் கல், இரும்புக் கம்பி இரண்டையும் எடுத்துக்கொண்டார் கேஸனோவா. 'தரையில் சுரங்கம் தோண்டினால் சிரமம்' என்று கூரையையே தோண்டித் தப்பிவிட்டார் கேஸனோவா. இதன் மூலம் 'தப்பிக்கவே முடியாத சிறை' என்ற பெருமையை இழந்தது லீட்ஸ்.

டியெட்டர் டெங்க்லர் என்கிற அமெரிக்க நேவியைச் சேர்ந்த பைலட், வியட்நாம் ராணுவத்திடம் பிடிபட்டார். சிறையில் ஆறு கைதிகளை ஒன்றிணைத்தார் டெங்க்லர். ஏழு பேரும் வெறும் கைகளாலேயே காவலர்களைத் தாக்கிக் கொன்றுவிட்டு, காட்டுக்குள் தப்பித்தார்கள். அடர்ந்த காட்டில் அலைந்ததில் ஐந்து பேர் இறந்துவிட்டார்கள். மூச்சைப் பிடித்துக்கொண்டு அலைந்த டெங்க்லரை ஒரு வழியாகக் கண்டுபிடித்து கரை சேர்த்தது அமெரிக்க ராணுவம்.

பயிற்சி வகுப்புகள் நடப்பதால் ஃபிரான்ஸ் சிறைகளின் மேற்கூரைகள் சமதளமாக இருக்கும். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் பாஸ்கல் பாயேட் என்கிற சிறைக் கைதி. தன் நண்பர்களுக்குத் தகவல் சொல்லி ஹெலிகாப்டரை வரவழைத்துத் தப்பித்தான். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே சிறைக்குத் தன் மூன்று கைதி நண்பர்களை மீட்க ஹெலிகாப் டரில் வந்தான். இந்த முறை பதுங்கியிருந்த போலீஸ் பாயேட்டைப் பிடித்துவிட்டது. அவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பாயேட் அசரவில்லை. மீண்டும் ஹெலி காப்டரில் தப்பிவிட்டான்!

-பா.முருகானந்தம்