Published:Updated:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 21வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மீண்டும் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, ''மாநாட்டு தலைமைக்குழு தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில், மாநில செயலாளராக என்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்து உள்ளனர்.

உ.வே.சா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். இதற்கு மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரபரவல், தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ளுதல், தமிழர்களுக்கு சம அந்தஸ்து அளித்தல், தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்தல் போன்ற தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அரசியல், பொருளாதார நிலை, சமூக சூழல் போன்ற பிரச்னைகள் தொடர்பாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டவைகளை மக்களிடம் எடுத்து செல்ல ஏப்ரல் மாதம் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும்.

மேலும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கோடி, கோடியாக சலுகை அளித்து தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மூடப்படுகின்றன. தொடங்கும்போது மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு பிரமாண்டமாக பேசினார்கள்

ஆனால் மூடும்போது, மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. மூடக்கூடாது என்று நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. ஊழலுக்கு எதிராக போராட மாநாட்டில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு உடனடியாக ‘லோக் ஆயுக்தா’ கொண்டுவர வேண்டும்" என்றார்.