Published:Updated:

அரசிடம் உரவிலையை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அமைச்சர்

விகடன் விமர்சனக்குழு
அரசிடம் உரவிலையை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அமைச்சர்
அரசிடம் உரவிலையை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அமைச்சர்
அரசிடம் உரவிலையை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அமைச்சர்

சென்னை: மத்திய அரசிடம் உரவிலையை குறைக்கும் திட்டமில்லை என்று மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தெரிவித்தார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சென்னை உரத்தொழிற்சாலையை விரிவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உள்நாட்டிலேயே அதிகளவில் உரங்களை தயாரிக்கும் பணி நடந்த வருகிறது.

உள்நாட்டு உற்பத்தியை பயன்படுத்தி உழவர்களுக்கு தடையின்றி உரங்கள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு மானிய விலையில் தொடர்ந்து உரங்கள் வழங்கப்படும். உரங்களின் விலையை குறைக்கவோ, அதிகரிக்கவோ தற்போது திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை" என்றார்.