Published:Updated:

பீகார்: ஜிதன்ராம் மான்ஜி திடீர் ராஜினாமா; முதல்வராகிறார் நிதிஷ் குமார்!

பீகார்: ஜிதன்ராம் மான்ஜி திடீர் ராஜினாமா; முதல்வராகிறார் நிதிஷ் குமார்!
பீகார்: ஜிதன்ராம் மான்ஜி திடீர் ராஜினாமா; முதல்வராகிறார் நிதிஷ் குமார்!
பீகார்: ஜிதன்ராம் மான்ஜி திடீர் ராஜினாமா; முதல்வராகிறார் நிதிஷ் குமார்!

பாட்னா: நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பு பீகார் முதல்வர் ஜிதன்ராம் மான்ஜி ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளராக இருந்த ஜிதன் ராம் மான்ஜி, கடந்த மே மாதம் 20 தேதி முதல்வரானார். ஆனால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ஏற்க விரும்பினார். அவருக்கு மான்ஜி வழி விட மறுத்துவிட்டதால் பீகாரில் அரசியல் குழப்ப நிலை உருவாகியது.

முதல்வர் மான்ஜி, ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, கட்சி சாராத உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்து வந்த அமைச்சர்கள் நரேந்திரசிங், பிரிஷன் படேல், சாஹித் அலிகான், சம்ரத் சவுத்ரி, நிதிஷ் மிஷ்ரா, மகாசந்திர பிரசாத் சிங், பீம்சிங் ஆகியோர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பீகார் சட்டசபை இன்று கூடுவதாக இருந்தது. முதல்வர் மான்ஜி, நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்த பின்னர் அதன்மீது ஓட்டெடுப்பு நடப்பதாக இருந்தது.

இதனிடையே, முதல்வர் மான்ஜி தனது பதவியை இன்று திடீரென செய்தார். தனது ராஜினாமா கடித்தை ஆளுநரிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பீகாரில் நடந்து வந்த அரசியல் குழப்பம் மான்ஜி  ராஜினாமாவுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், பெரும்பான்மையுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க ஆளுநர் முடிவு செய்துள்ளார். அதன் பின்னர் பீகார் புதிய முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார்.