Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


நம்பிக்கை துரோகிகள் !
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்

கருணையே வடிவான தாயின் முகமூடியோடு, முலைப் பாலில் விஷம் ஏந்தி வந்த அரக்கக் குலம்பற்றி புராண-இதிகாசங்களில் படித்திருக்கிறோம். அதற்குச் சமமானதொரு நம்பிக்கைத்துரோகத்தில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது!

அநாதைக் குழந்தைகளைக் காக்க, அபலைப் பெண்டிருக்குப் பாதுகாப்பு அளிக்க, சுனாமி சோகம் துடைக்க, உயிர்க்கொல்லி நோய் குறித்து விழிப்பு உணர்வு உண்டாக்க என்று சமூக சேவை நோக்கங்களுக்காகத் துவக்கப்படும் தன்னார்வ அமைப்புகள் இந்தியாவில் ஏராளம். பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் தானே நேரடியாகத் தீர்வு தர முடிவதில்லை என்ற காரணத்தால், இதுபோன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதோடு, நிதி ஒதுக்கீடும் செய்கிறது. வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கும் அரசாங்கம் வழி விடுகிறது!

அத்தகைய சேவை அமைப்புகளில், பெண்டிர் மற்றும் குழந்தைகள் நலனைக் காரணம் காட்டி, சில போலிகள் ஊடுருவி, அடுத்தவர்களின் துயரத்தைக் காசாக்குகிற விபரீதம் நடப்பதாக ஆதாரபூர்வமான புள்ளிவிவரம் ஒன்றை மத்திய அரசுத் துறையே வெளியிட்டுப், பதறவைத்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மற்றும் மேகாலயாவுக்கு அடுத்தபடியாக போலி தன்னார்வ நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகமாம். நம் மாநிலத்தில் மட்டும் இப்படி 306 அமைப்புகள் 'சுயநலச் சேவை' நடத்தி வருகின்றனவாம்!

மத்திய-மாநில அரசுகள், இதுபோன்ற விஷக் காளான்கள் முளைக்கும்போதே அடையாளம்கண்டு கிள்ளி எறிவதற்கு உடனே கெடுபிடிகளைக் கூட்டியாக வேண்டும். எளியோரின் நலன் காக்க அமைக்கப்படும் ‘மனித உரிமை அமைப்பு'களின் பெயரால் தலையெடுக்கத் துவங்கியிருக்கும் கட்டப்பஞ்சாயத்துக் காளான்களையும் இரும்புக் கரம்கொண்டு நசுக்கியாக வேண்டும்.

உயிர்காக்கும் மருந்துகளில் போலிகள் ஊடுருவினால், அது எத்தகைய பெருங்கேடோ... அத்தகைய ஆபத்து இங்கும் உண்டு என்பதை அரசு உடனே உணர்வது நல்லது!

 
தலையங்கம்
தலையங்கம்