Published:Updated:

ரனில் விகரமசிங்கே வருத்தம் தெரிவித்தார்: சொல்கிறார் சுஷ்மா!

ரனில் விகரமசிங்கே வருத்தம் தெரிவித்தார்: சொல்கிறார் சுஷ்மா!
ரனில் விகரமசிங்கே வருத்தம் தெரிவித்தார்: சொல்கிறார் சுஷ்மா!

ரனில் விகரமசிங்கே வருத்தம் தெரிவித்தார்: சொல்கிறார் சுஷ்மா!

ரனில் விகரமசிங்கே வருத்தம் தெரிவித்தார்: சொல்கிறார் சுஷ்மா!

புதுடெல்லி: தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம் என்று கூறியதற்கு இலங்கை பிரதமர் வருத்தம் தெரிவித்தார் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கசெல்லும்போது அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல சட்டம் அனுமதி அளிக்கிறது' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், மீனவர் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், டெல்லியில்  மக்களவை உறுப்பினர்கள் இந்த பிரச்னையை நேற்று எழுப்பினர்.

அப்போது, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசும்போது, ''தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். இரு நாடுகளும் அடுத்தவரது மீனவர்களை சுட்டுக்கொல்வது உரிய தீர்வு அல்ல.

கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த நான், அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்தபோது, அவரது கருத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தேன். அவர், தமிழக மீனவர்களையும், கேரளாவில் மீனவர்களை சுட்டுக்கொன்று கைது செய்யப்பட்ட இத்தாலி கப்பல் மாலுமிகளையும் ஒப்பிட்டு இருப்பது சரியல்ல என்றும் அவரிடம் கூறினேன்.

அதற்கு, தான் உண்மை நிலவரம் தெரியாமல் பேசி விட்டதாகவும், அப்படி பேசி இருக்கக்கூடாது என்றும் ரனில் விக்ரம சிங்கே என்னிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பணம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக, சிறப்பு திட்டம் ஒன்றை விரைவில் மத்திய அரசு உருவாக்கும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறும்வரை, இந்தப் பிரச்னை மனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு