Published:Updated:

வாசன் மீண்டும் காங்கிரசுக்கு வருவார்: ஆரூடம் சொல்லும் திருநாவுக்கரசர்!

Vikatan Correspondent

ராமநாதபுரம்: ஜி.கே.வாசன் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வருவார் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திருநாவுக்கரசர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா போன்றோர் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தலில் அறிவித்து ஆட்சிக்கு வந்தனர்.

தற்போது, இந்த ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

ஜி.கே.வாசன் கட்சியை விட்டு வெளியேறியதால் காங்கிரசுக்கு எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், வாசன் காங்கிரசிலிருந்து விலகிச் சென்றுள்ளது தற்காலிகமானது தான். அவர், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருவார். காங்கிரஸ் கட்சியில் சேருவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை" என்றார்.