Published:Updated:

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!
மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 23 ஆம் தேதி மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை செல்கிறார். அதிலும் குறிப்பாக தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கும் செல்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு செல்வது வரலாற்றில் முதல் தடவையாக அமைந்துள்ளது. மோடியின் தமிழர் பகுதிக்கான பயணம் பல்வேறு எதிர்பார்ப்புக்களை கிளப்பி விட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஆட்சி மாறி இருந்தாலும் இன்னமும் தமிழர் பகுதிகளில் இராணுவம் குடிகொண்டுள்ளது, இராணுவத் தேவைகளுக்காக காணி அபகரிக்கும் செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது, தமிழ்மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு குறித்து மைத்திரி அரசாங்கமும் பேச மறுத்து வருகின்றது.

இந்த நேரத்தில் மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் தமிழ்நாடு என்ன நினைக்கிறது என்பதனை அறிய இங்குள்ள கட்சிகள், அமைப்புக்கள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள், அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் என்று பலரிடமும் கருத்து கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் அப்படியே உங்களுக்காக,


 உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்:

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

மோடி யாழ்ப்பாணம் செல்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர் யாழ்ப்பாணம் செல்வதாக இருந்தால், அல்லது ஈழத்தின் வேறு எந்தப் பகுதிக்கும் செல்வதாக இருந்தாலும், அவர் தமிழ்மக்களை நேரில் சந்தித்து சுதந்திரமாக உரையாடும் வாய்ப்பு  கிடைக்குமா என்பது தான் எங்களுக்கு உள்ள மிகப்பெரிய கேள்வி? அப்படிக் கிடைத்தால் மட்டுமே அவரின் யாழ்ப்பாணப் பயணத்தில் ஏதாவது பயன் இருக்கும் என நான் கருதுகிறேன் அப்படி நேரில் சந்தித்தால் மக்கள் தங்களின் உள்ளக் குமுறல்களை அள்ளிக் கொட்டுகின்ற வாய்ப்பாக அது இருக்கும். போரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களை சும்மா எட்டிப் பார்த்துவிட்டு வருவதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் கருதுகின்றேன்.

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்: மோடியின் இலங்கை விஜயம் தொடர்பாக ஏராளமான எதிர்பார்ப்புக்கள் எம்மிடம் உள்ளன. அவர் இலங்கை செல்வதால் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. இருப்பினும் மீன்பிடி உரிமை, ஈழத்தமிழர்களின் அடிப்படையை உரிமையாவது பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இலங்கைக்கு போய் விட்டு வந்த பின்னர் தான் அவரது பயணம் தொடர்பாக முழுமையாக கருத்து தெரிவிக்க முடியும்.

திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி: மோடியின் இலங்கைப் பயணத்தால் எந்த விதமான பயனும் கிடைக்கும் என்று நாங்கள் கருதவில்லை. இங்கே இருந்து ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்யாதவர் அங்கே போய் மட்டும் என்ன செய்து விடப் போகிறார். அதன் காரணமாக எங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக இங்கே இருக்கின்ற அமைப்புக்கள் இணைந்து மார்ச் 7 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இதன் முழக்கங்களாக,
* இந்திய அரசு இலங்கையைப் புறக்கணி

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!


* மோடியே இலங்கைப் பயணத்தை ரத்துச் செய்
* வடக்கு மாகாண சபை தீர்மானத்தை அங்கீகரித்து இந்திய நாடாளுமன்றில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்று.

ஆகவே, மோடியின் பயணத்துக்கு எல்லோரும் இணைந்து எம் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

மே, 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி: மோடியின் இலங்கை விஜயத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். மோடியின் யாழ்ப்பாணப் பயணத்தின் நோக்கம், இந்தியாவினுடைய ஆதிக்கத்தை தமிழர் பகுதியில் நிலை நிறுத்துவதற்காக தான் உள்ளது.  வட இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதியில் தங்களின் நிலையை உறுதி செய்வதுடன், அங்கே இருக்கக் கூடிய உயர்தட்டு வர்க்கத்தினருடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது. வட இலங்கையில் தங்களின் முதலீடுகளை மேம்படுத்திக் கொள்வது. போன்றவற்றுக்கான பயணமாக தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

இதுவரை மோடி, தமிழர்களின் விடுதலை சார்ந்தோ, இனப்படுகொலை தொடர்பிலோ எவ்வித நிலைப்பாடும் எடுக்காத பொழுது, மோடியின் தமிழர் பகுதிகளுக்கான பயணம் வந்து யாருடைய நலனுக்காக என்பது தான் முக்கியம். யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடிய இந்தியாவின் துணைத் தூதரகம் என்பது, அங்கே தமிழர்கள் மத்தியில் சீர்குலைவுகளை ஏற்படுத்தும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதனை வலுப்படுத்துவதற்கும் தான் இந்த விஜயம் அமைந்துள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அங்கே இருக்கக் கூடிய ஈழத் தமிழர்கள் மோடியை கறுப்புக் கொடியுடன் தான் எதிர்கொள்ள வேண்டும். அதுதான் உண்மையானதாக இருக்க முடியும். ஆனால், மோடியினுடைய நடவடிக்கை தொடர்ந்தும் தமிழர்களுக்கு விரோதமான நடவடிக்கையாகத் தான் இருந்து கொண்டு இருக்கின்றது.

கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மா: பொதுவாக ஒரு நாட்டின் பிரதமர் அண்டை நாட்டுக்கு பயணம் செய்வது என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம். மிகப்பெரிய இனப்படுகொலை நடந்த இலங்கைக்கு நம் நாட்டின் பிரதமர் பயணிக்கிறார். இந்தப் பயணத்தினால் என்ன விதமான மாற்றங்களையோ, அங்கே ஏற்படுத்த முடியும் என்பது தான் மிகப்பெரிய கேள்வி. இதுவரைக்குமான மோடி மீதான அபிப்பிராயம் என்பது ஆரோக்கியமான அபிப்பிராயமாக யாருக்கும் கிடையாது. அவர் உண்மையில் ஒரு சரியான நபரும் கிடையாது. குஜராத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய மாபெரும் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்திருக்கக் கூடியவர் என்று தான் எங்களுக்கு தெரியும். அந்த வகையில் மதம் சார்ந்து, ஒரு பாசிசமான ஆளாகத் தான் அவரைக் குறித்து அறிந்து வைத்துள்ளோம். அப்படியான ஒருவர் வந்து அங்கு பயணம் செய்வது என்பதோ, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது என்பதோ சம்பிரதாயபூர்வமானது என்று தான் நாங்கள் பார்க்க வேண்டுமே தவிர, உண்மையில் அந்த மக்கள் மேல் உள்ள அக்கறையினாலேயோ,

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

அவர்களுக்கு இதனால் நன்மை ஏதும் நடக்கும் என்பதிலேயோ எங்களைப் போன்றவர்களுக்கு எந்தவித நம்பிக்கையும் கிடையாது.

இதுவரைக்கும் எத்தனையோ உலகத் தலைவர்கள் பான் கீ மூன் - டேவிட் கமரூன் வரை அங்கு போய் இனப்படுகொலை நடந்த இடங்களை பார்த்துவிட்டுத் தான் வந்துள்ளார்களே ஒழிய அந்த மக்களின் உரிமைகளை பெற்றுத் தருவதற்கோ, அல்லது அந்த மக்களின் அழிவுக்கு சமனாக ஈடு செய்யக் கூடிய விடயங்களை ஆக்கபூர்வமாக செய்வதற்கு இதுவரைக்கும் எந்த முயற்சியும் யாராலும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மோடி அங்கு சென்று பார்த்து விட்டு வருவதால், அந்த மக்களின் வாழ்வில் மாற்றங்கள் உண்டாகும், நல்ல விடயங்கள் நடக்கும் என்பதில் எல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லை. சும்மா போய்விட்டு தான் வரப்போகிறார்கள். அது அவரின் விளம்பரத்துக்காக கூட இருக்கலாம். இனப்படுகொலை புரிந்து, சர்வதேச விசாரணைக் கூண்டில் முன்நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் சொல்லக் கூடிய ஒரு குற்றவாளியான ராஜபக்சேவை தன்னுடைய பிரதமர் பதவியேற்புக்கு அழைக்கிறார் என்றால் அவர் எந்தளவுக்கு மக்களுக்கு நன்மை நடக்ககூடிய விடயங்களில் ஆர்வம் உள்ள ஆள் என்பதனை நிச்சயமாக நம்மாளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏதோ ஒரு நாட்டுக்கு போறார். போய் பார்த்துவிட்டு வரப்போகிறார். என்று மட்டும்தான் எங்களால் இதனைப் பார்க்க முடிகிறது. இதனால் மக்களுக்கு எந்த விடயமும் நடக்கப் போவதில்லை.

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தோழர் தியாகு: இலங்கையில் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகி இருப்பதனை ஒரு மாற்றம் என்று நாம் அங்கீகரிக்கவில்லை. இதனை மாற்றம் என்று கருதுகின்றவர்கள் தான் ராஜபக்சேவுக்கு ஒரு அளவுகோலையும், மைத்திரிபாலவுக்கு ஒரு அளவுகோலையும் பின்பற்றுவார்கள். ஆகவே, இனக்கொலை செய்த அரசாங்கம் தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிடும். அதனை தடுப்பதில் முனைப்பாக இருக்கின்றது. இந்த விடயத்தில் ராஜபக்சேவுக்கும், மைத்திரி பாலவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற விடாமல் தடுப்பதிலும் வேறுபாடு இல்லை. இலங்கையைப் புறக்கணிப்போம் என்கிற எங்களுடைய முழக்கம் தொடர்கின்றது. மோடி இலங்கைக்கு செல்லக் கூடாது என்பது தான் எங்களின் கோரிக்கை. அங்கே சென்று அவர் இதை, அதைச் செய்ய வேண்டும் என்று கேட்பது எங்கள் நோக்கம் இல்லை. மைத்திரி பால டெல்லி வந்த போது எப்படி ஈழத்தமிழர்கள் குறித்த பேச்சு வெளிப்படையாக நடத்தப்படவில்லையோ, அதே போல் இப்போது அங்கு போவதாலும் நமக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அவர்கள் சம்பூரை பற்றி பேசுவார்கள், பெருந்தொழில் முதலீடு தொடர்பில் பேசுவார்கள். இதில் இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது வெறும் நாடகத்துக்கு தான் பயன்படும். மோடி இலங்கை செல்லக் கூடாது இது தான் எங்களின் ஒற்றை முழக்கம். மோடியை புறகணிப்போம். மோடி இலங்கை செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போம். 

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

இயக்குனர் வ.கௌதமன்: இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு, தமிழர் பகுதிகளுக்கு போகிறார், போகட்டும். ஆனால், 25 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி போனார், ஒப்பந்தம் போட்டார். திரும்பி வந்தார்.  ஈழத் தமிழர்களுக்கான ஒரு நிரந்தர விடிவு இந்த நிமிடம் வரைக்கும் இல்லை. அதே போல் மோடியின் இலங்கை விஜயம் குறித்தும், அதன் நோக்கம் தொடர்பிலும் முழுமையான காரணத்தை இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. எப்பவும் இந்திய தேசத்தில் இருந்து போகும் அதிகாரிகள் ஒன்று ரகசியமாகப் போகின்றார்கள். சில பேர் மட்டும் வெளிப்படையாகப் போகின்றார்கள். வெளிப்படையாகப் போனாலும் பேசப்படும் விடயங்கள் ரகசியமாகத் தான் உள்ளது.

திருகோணமலையில் தமிழ்மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த சம்பூர் விட்டு பல ஆண்டுகளுக்கு முன் விரட்டப்பட்ட மக்கள் அகதிமுகாம்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். குறித்த மக்கள் வாழ்ந்த காணியை இந்திய அதிகார வர்க்கத்துக்கு பெட்ரோலிய ஆலைகளை நிறுவுவதற்காக இலங்கை அரசு தாரை வார்த்து விட்டதாக அறிகிறோம். ஈழத் தமிழர்களின் பூர்வீக மண்ணில் சிங்கள பேரினவாதம் குடி கொண்டிருக்கிறதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த நிலையில் இந்திய அதிகார வர்க்கம் எமது பூர்வீகமான நிலத்தை கையகப்படுத்துவதென்பது எவ்வளவு அநீதியானது. இந்த விடயம் நிச்சயம் மோடிக்கு தெரியாமல் இருக்காது. தமிழர்களின் பூர்வீக நிலத்தில் இந்திய அதிகார வர்க்கம் தொழில் தொடங்காது என்பதனை உறுதி செய்த பிறகு மோடி அங்கு செல்ல வேண்டும்.

இந்துப் பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவான பா.ஜ.க.வின் பிரதமர் மோடி, உண்மையில் இந்துத்துவத்தில் நம்பிக்கை இருந்தால் ஈழத்தில் பல நூற்றுக்காணக்கான கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்ல பள்ளிவாசல்களும், கிறிஸ்துவ மத தேவாலயங்களும் இடிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை மோடி போய் நேரில் பார்க்க வேண்டும்.  அதற்கு பலத்த கண்டனத்தை மோடி தெரிவிக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர் பிரதேசங்களில் இன்னும் தொடரும் இராணுவ வல்லாதிக்கத்தினையும் முற்று முழுதாக நீக்குகின்ற ஒரு பயணமாக இது இருக்க வேண்டும். தமிழர்களுக்கு சம அந்தஸ்துடன் கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்த பயணமாக இது இருக்க வேண்டும். இப்படியாக தமிழர்களுக்கு ஒரு விடிவைக் கொடுக்கும் பயணமாக அமையாது விடின், ராஜீவ் காந்தியின் பாதையை நோக்கிய ஒரு பயணமாக தான் இதனை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்: இனப்படுகொலை செய்த இலங்கையை புறக்கணிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்திய அரசு இலங்கையுடனான அரசியல், பண்பாட்டு, பொருளாதார உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்பதே தமிழர்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையாக இருந்து வருகிறது. தமிழக அரசும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறது. எப்படி காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்த போது பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று நாம் வலியுறுத்தினோமோ, எப்படி ராஜபக்சே இந்தியாவுக்குள் வரக் கூடாது என்று சொன்னோமோ, அதே போல் இந்தியாவுக்கு மைத்திரி பாலவும் வரக் கூடாது.

இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதன் மூலம் தான் இனப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசை நாம் தனிமைப்படுத்த முடியும். இதே போல் தான் தென்னாபிரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் இப்படி செய்து இருக்கின்றார்கள். சிங்களத்தை தனிமைப்படுத்துவதன் ஊடாகத் தான் நாம் வெற்றியடைய முடியும் இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும். ஐ.நா அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க கோரி இந்தியா வலியுறுத்த வேண்டும். இலங்கை தமிழர் தொடர்பான திட்டவட்டமான நிலைப்பாட்டை வடமாகாண சபை எடுத்திருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை எடுத்திருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் எடுத்து இருக்கின்றார்கள். இது தொடர்பாக இந்திய அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் அங்கு செல்வது அங்கே உள்ள தமிழர்களை ஏமாற்றுவதற்காககவே ஒழிய வேறொன்றும் அல்ல. திட்டமிட்ட அரசியல், பொருளாதார உறவுகளுக்காக செல்கிறார்கள்.

தொடக்கத்தில் இந்திய அமைதிப்படை அங்கு சென்ற போது இந்தியா நன்றாக உதவப் போகின்றது என்கிற மயக்கம் தமிழ்நாட்டிலும் இருந்தது. ஈழத்திலும் இருந்தது. அந்த மயக்கத்தில் இருந்து முதலில் தெளிந்தவர்கள் ஈழத் தமிழர்கள். அதன் பிற்பாடு தான் தமிழ்நாட்டில் இந்திய அமைதிப்படை மீளவும் திரும்பி வர வேண்டும் என்கிற கோரிக்கை வந்தது. மோடியின் தற்போதைய இலங்கை விஜயத்தின் மூலம் அப்படியானதொரு வரலாறு  மீண்டும் திரும்புவதாகவே எனக்குப்படுகிறது. இந்த விடயத்தில் தமிழ்நாடு மக்கள் எடுக்கின்ற அதே நிலைப்பாட்டை சரியான ராஜதந்திர ரீதியில் ஈழ மக்களும், அங்கே உள்ள அரசியல் தலைமைகளும் எடுக்க வேண்டும். 1987 இல் நடந்ததற்கு மறுவலமாக அரசியல் செய்ய வேண்டிய நேரமிது. இந்தியப் பேரரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் அதே நேரத்தில் சிங்களப் பேரினவாத அரசிலிருந்து விலகி நிற்க வேண்டும். இது தான் எங்களின் கோரிக்கை. தமிழ்நாடு, புலம்பெயர் நாடுகள், தாயக ஈழத் தமிழர்கள் இந்த மூவரின் பாத்திரம், பங்குகள் வேறு வேறாக உள்ளன. இங்கே தான் எங்களுக்குப் பிரச்னை. நாம் மூவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும். இலங்கைத் தீவுக்குள் இருக்கும் முரண்பாட்டைப் பொறுத்தவரைக்கும் இந்திய அரசு ஒன்றில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அல்லது சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இதற்கு நடுவில் இடைப்பட்ட ஒரு இடமே கிடையாது. இது குறித்து ஒரு நிலைப்பாடு எடுக்காமல் போனால் அவர்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தான் செயற்படுவார்கள்.

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன்: 1987 இல் ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்றதன் பிறகு, மோடி அறிவித்திருக்கின்ற இலங்கைப் பயணத்தை சாதாரண விடயமாக நாங்கள் பார்க்க முடியாது. இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் ஒரு பங்கு வகித்த இந்தியாவினுடைய பிரதமர் இலங்கைக்கு போவது என்பது அங்கு இடம்பெற்ற இனப்படுகொலையை மூடி மறைப்பதற்கான நடவடிக்கையாகவும், அங்கே இருக்கிற தமிழீழக் கோரிக்கையை மட்டுப்படுத்துகின்ற ஒரு செயலாகவும் தான் இதனைப் பார்க்க முடியும். சிங்கள அரசினுடைய ஆட்சி மாற்றம் என்பது ராஜபக்சே போய் சிறிசேன வந்தால் கூட இது சிங்களப் பேரினவாதத்தின் தலைமை தான் மாறியிருக்கின்றதே ஒழிய அங்கே உள்ள தமிழர் தரப்புக்கு இதனால் எந்தவித நீதியும் கிடைத்துவிடப் போவதில்லை. அப்படி ஒரு சூழல் இருந்தது இல்லை. சிறிசேனவின் இந்திய விஜயமும், மோடியின் இலங்கை விஜயமும் எதனைக் காட்டுகின்றது என்றால், ஆட்சி மாற்றத்தால் தமிழர்கள் நன்றாக இருக்கிறார்கள். எல்லாம் அவர்களுக்கு கிடைத்துவிட்டது. போன்ற ஒரு தவறான விம்பத்தை உலக நாடுகளின் மத்தியில் கொண்டு போய்க் கொண்டு இருக்கின்றார்கள். இன்னமும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளும், இராணுவ, சிங்கள மயமாக்கல்கள், கலாச்சாரப் படுகொலைகள் தொடர்ந்திருக்கின்ற இந்தச் சூழலில் இந்தியப் பிரதமர் அதையெல்லாம் சரி செய்யாமல் அவர் நட்பு பயணமாக இலங்கைக்கு செல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கான எதிர்ப்புக் குரல் தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக வரும். மாணவர்களாகிய நாங்கள் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அங்கே தமிழர்களுக்கு நீதி கிடைக்கின்ற வரைக்கும், இந்தியா இலங்கையுடனான அனைத்து நட்பு உறவுகளையும், ராஜதந்திர உறவுகளையும், பொருளாதார உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டும். இலங்கை இந்தியாவினுடைய நட்பு நாடு கிடையாது. அது ஒரு இனப்படுகொலை நாடு என்பதனை இந்தியா அறிவிக்க வேண்டும்.

மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்!

திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்: மோடி அங்கு போவதால் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படப் போவதில்லை.  மூன்று விடயங்கள் நடக்க வேண்டும்.

முதலாவது, நடந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்பதனை இலங்கையில் போய் மோடி நின்று கொண்டு வலியுறுத்த வேண்டும். இறுதிப்போரில் இலங்கைக்கு உதவிய சோனியா தலைமையிலான காங்கிரசை எதிர்த்து இன்று வரை மோடி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.  இதனால் அங்கே போய் நீதி கேட்கும் தார்மீக உணர்வோ, தைரியமோ இவருக்கு கிடையாது.

இரண்டாவது, இன்றும் தொடர்ச்சியாக பல பட்டாலியன் இராணுவங்கள் வடகிழக்கில் நிலை கொண்டுள்ளன. அந்த இராணுவத்தை திரும்பப் பெறு என்கிற தைரியம் மோடிக்கு இருக்குமா?

மூன்றாவது, தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கின்றது. இதுவும் நடக்கப் போவதில்லை. ஆகவே மோடியின் இலங்கை விஜயத்தால் எந்தப் பயனும் ஏற்படாது என்றே நான் கருதுகின்றேன்.

-செ.கிரிசாந்

அடுத்த கட்டுரைக்கு