Published:Updated:

வெளிச்சம் காணா விழிகளின் கொண்டாட்டம்!

வெளிச்சம் காணா விழிகளின் கொண்டாட்டம்!
வெளிச்சம் காணா விழிகளின் கொண்டாட்டம்!

வெளிச்சம் காணா விழிகளின் கொண்டாட்டம்!

களிர் தினக் கொண்டாட்டங்கள் மனதளவில் போராட்டங்களை வென்றெடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறும் பெண்களுக்கு மட்டுமானதா?

மனதளவில் போராட்டங்களை சந்திக்கும் இத்தகைய பெண்களுக்கு மத்தியில் பெண்ணாய் பிறந்ததோடு இயல்பில் உடலில் ஊனத்தோடு மற்றவர்களைப் போல இல்லாமல் யாரையோ சார்ந்தே வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் பெண்களுக்கு மகளிர் தினம் கிடையாதா? தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும் வரும் பார்வையற்ற மாணவிகளை அரவணைத்து அவர்களுக்கு விழியாக இருக்கிறது இந்திய பார்வையற்றோர்க்கான பத்மம் அறக்கட்டளை. அவர்கள்  கொண்டாடிய மகளிர் தினம் நிஜமான கொண்டாட்டமாக இருந்தது மைலாப்பூரில்.

வெளிச்சம் காணா விழிகளின் கொண்டாட்டம்!திருநெல்வேலி, தஞ்சை, நாகை, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து பார்வையற்ற மாணவிகள் சென்னை வந்து, தங்கி சென்னைப் பல்கலைக்கழகம், மாநிலக்கல்லூரி, ராணிமேரி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை படிப்புகளை பயின்று வருகின்றனர். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வு, வங்கித்தேர்வுகள், அஞ்சல் துறை தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுகள் என்று ஒவ்வொரு மாணவியும் ஒரு இலக்கினை உருவாக்கிக் கொண்டு, தமிழகத்தின் பல துறைகளை ஆள, அனுதாபங்களையும், தடைகளையும் தாண்டி போராடிக் கொண்டிருக்கின்றனர். அத்தகையவர்களுக்கு வேடந்தாங்கலாய் உள்ளது இந்திய பார்வையற்றோர்க்கான பத்மம் அறக்கட்டளையின் கீழ் நடத்தப்பட்டு வரும் இந்த விடுதி.

இங்கு அரசுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மட்டுமின்றி, மாணவிகளுக்கான உணவுகள், உடைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், போக்குவரத்து செலவுகள் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. தங்களுக்கும், விடுதிக்கும் உதவியவர்கள், உதவிக் கொண்டிருப்பவர்களோடு சேர்ந்து இந்த விடுதி மாணவிகளும் மைலாப்பூரில் மகளிர் தினத்தினை ஆடல் பாடலோடு கொண்டாடினர்.

வெளிச்சம் காணா விழிகளின் கொண்டாட்டம்!

திரைப்பட நடிகை ஜானகி, பின்னணிப் பாடகி ப்ரியா உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பார்வையற்ற மாணவிகள் தங்களின் பல்வேறு திறமையை வெளிப்படுத்தி ஆச்சர்யம் தந்தனர்.

விடுதியை நிறுவி நடத்தி வரும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் பத்மராஜிடம் பேசி னோம். "நம் சமூகத்தில் பலதரப்பட்ட மக்களுக்கு என்று பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், பார்வைத்திறனற்றவர்களுக்கான அமைப்புகள் அதிகமில்லை.

வெளிச்சம் காணா விழிகளின் கொண்டாட்டம்!

இயல்பில் தங்கள் ஊனத்தினால் பிரச்னைகளை எதிர்கொண்டு போராட்ட வாழ்க்கையினை நடத்தி வரும் இவர்களின் அடிப்படை போராட்டங்களைக் கூட யாரும் கண்டுகொள்வதில்லை, மதிப்பதுமில்லை. இவர்களுக்கான அரசு தரப்பு விடுதிகளும் முறையாக இயங்குவதில்லை. தொலை தூர கல்வியில் படிப்பவர்களுக்கும், படித்து முடித்து பணி தேடுபவர்களுக்கும் அரசு விடுதிகளும், மற்ற விடுதிகளும் தங்கிக்கொள்ள அனுமதிப்பதில்லை.

பட்டங்கள் முடித்து, ஏதோவொரு வேலைக்காகவும், தேவைக்காகவும், தேர்வுக்காகவும்  இம்மாதிரியான மாணவிகள் சென்னைக்கு வந்து தங்கிப் பயிலுவதில் பல சங்கடங்கள் உள்ளன. மேலும், பார்வையற்ற பெண்களிடமும், மாணவிகளிடமும் பல இடங்களில் அத்துமீறல்கள் நடந்து வருவதால், இப்படிப்பட்ட மாணவிகளுகென்றே ஒரு விடுதியினை நடத்த முடிவெடுத்தேன். என் குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் இணைந்து, அரசு பதிவெண் அனுமதியோடு 'இந்திய பார்வையற்றோர்க்கான பத்மம் அறக்கட்டளை விடுதியினை கடந்த வருடம் தொடங்கினோம்.

வறுமையில் இருக்கக்கூடிய மாணவிகள் மட்டும்தான் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இவர்களின் இலக்குகளுக்கு ஏற்றவாறு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கும், படிப்புகளுக்கும் உதவியவர்கள் , உதவிக்கொண்டிருப்பவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மகளிர் தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்தோம் என்றார்.

இதுதவிர, சென்னைக்கு தேர்வுகளுக்கும், பிற தேவைகளுக்கும் வெளியூரிலிருந்து வரும்  பார்வைத்திறனற்றவர்கள் குறுகிய கால அளவில் தங்கவும் இந்த விடுதி வாய்ப்பளிக்கிறது. விரைவில் மாணவர்களையும் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பார்வைத்திறனற்றவர்கள் தங்கள் வலிகளை, மறந்து வாழ்வில் தன்னம்பிக்கையோடு ஜெயிக்க வழிகாட்டும் பத்மராஜ் இயல்பில் பார்வையற்றவரே.

வெளிச்சம் காணா விழிகளின் கொண்டாட்டம்!

“ஒரு பார்வையற்றவனாக அவர்களின் வலிகளையும், சங்கடங்களையும் நன்கு உணர்ந்தவன், உணர்ந்து கொண்டிருப்பவன் என்பதாலேயே  பல பொருளாதாரப் பிரச்னைகளுக்கிடையேயும் இட பற்றாக்குறையினைத் தாண்டியும் தொடர்ந்து இந்த பணியை செய்து வருகிறேன். பார்வையற்றவர்கள் எந்த உதவிகள் கேட்கவும், அளிக்கவும் எங்கள் கைப்பேசிக்கு அழைக்கலாம்" என நெகிழ்வாகப்  பேசுகிறார் பத்மராஜ்.

வெளிச்சம் காணா விழிகளின் கொண்டாட்டம்!

"அப்பா அம்மா இல்லாத என்னை, என் தம்பிதான் பார்த்துக்கொள்கிறான். முதுகலை முடித்துவிட்டு, வறுமையோடும், பறிக்கப்பட்ட  வாய்ப்புகளோடும் இருந்த என்னை இப்பொழுது எம்.எட் படிக்கவைத்து, அரசு தேர்வுக்கு தயார் படுத்தி வருவது இந்த விடுதிதான். இன்னும் சிறிது நாட்களில் கண்டிப்பாக பல துறைகளில் நாங்கள் ஜெயிப்போம்" என்று தன்னம்பிக்கை வழிய பேசினார் இங்கு தங்கி பயிலும் தருமபுரியைச் சேர்ந்த விஜயலட்சுமி.

விழியிருப்பவர்களுக்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது. விழியற்றவர்களுக்கு ஒரே வழியாக இருக்கிறது பத்மம் அறக்கட்டளை விடுதி. பாராட்டுவோம் அவர்களை!                                                                                                                  
- கு.முத்துராஜா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

அடுத்த கட்டுரைக்கு