Published:Updated:

பி.எஃப் கட்டாத நிறுவனங்களில் தமிழகம் முன்னிலை!

Vikatan Correspondent
பி.எஃப் கட்டாத நிறுவனங்களில் தமிழகம் முன்னிலை!
பி.எஃப் கட்டாத நிறுவனங்களில் தமிழகம் முன்னிலை!
பி.எஃப் கட்டாத நிறுவனங்களில் தமிழகம் முன்னிலை!

புதுடெல்லி: பி.எஃப் பணத்தைக் கணக்கில் சேர்க்கத் தவறிய அதிக நிறுவனங்களைக் கொண்ட மாநிலங்களில் கேரளா, தமிழகம் முன்னிலை வகிப்பதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய தொழிலாளர் நல அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இதை கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, 12 ஆயிரத்து 100 நிறுவனங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை செலுத்தத் தவறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப், மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த பல நிறுவனங்களும் பி.எஃப். பணத்தை செலுத்தத் தவறியுள்ளதாக அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.