Published:Updated:

நான் பிரதமராக விரும்பவில்லை: எல்.கே.அத்வானி

நான் பிரதமராக விரும்பவில்லை: எல்.கே.அத்வானி
நான் பிரதமராக விரும்பவில்லை: எல்.கே.அத்வானி

நாக்பூர், செப்.21,2011

நான் பிரதமராக விரும்பவில்லை: எல்.கே.அத்வானி

பிரதமர் பதவிக்கான ரேஸில் தாம் இல்லை என்று பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். ##~~##

ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராக பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நாடு தழுவிய அளவில் யாத்திரை மேற்கொள்ளவுள்ளார்.

இதையொட்டி, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத்திடம் அவர் இன்று ஆசி பெற்றார்.

நாக்பூரில் அவருடன் இணைந்து நிருபர்களிடம் பேசிய அத்வானி, "நான் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்து ஜன் சங்-க்குக்கும், அங்கிருந்து பிஜேபிக்கும் சென்றேன். இதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்படுவீர்களா என்றதற்கு, "நான் பிரதமராக விரும்பவில்லை. பிரதமர் பதவியை விட அதிக முக்கியத்துவத்தை எனது கட்சியும், ஆதரவாளர்களும் அளித்துள்ளனர்," என்றார்.

"எனது யாத்திரையையொட்டி ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத்திடம் ஆசி பெறவே இங்கு வந்தேன். அவர் தனது முழு ஆதரவை அளித்துள்ளார்," என்றார் அத்வானி.

முன்னதாக, தம்மிடம் ஆலோசிக்காமல் யாத்திரை குறித்த அறிவிப்பை வெளியிட்டதால், அவர் மீது ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

அடுத்த கட்டுரைக்கு