Published:Updated:

'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக்கா?'

'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக்கா?'
'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக்கா?'

'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக்கா?'

                                                                வாசகர் பக்க கட்டுரை

ATM காவலாளி: ஏனப்பா டெய்லி 2 முறை வந்து பேலன்ஸ் மட்டும் பார்த்துட்டு போற ?

தெற்குப்பட்டி ராமசாமி: "பிரதமர்  மோடி உங்கள் கணக்கில் 15 லட்சம் வரவு வைக்கப்படும்ன்னு சொன்னார்...அதனால்தான் வந்து வந்து இருக்கான்னு பார்த்து ATM CARD ஐ தேய்ச்சுட்டு போயிட்டு இருக்கேங்கய்யா...!'

இது ஜோக்குக்காக மட்டும் சொல்லப்பட்டு இருந்தால் மோடி பிரதமர் ஆகி இருக்க  முடியுமா ?

நாடாளுமன்ற தேர்தலின்போது கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி தனது பிரச்சாரங்களில் மோடி கூறியபோது, "கருப்புப் பணம் முழுதையும் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் சேர்ப்போம்" என்று கூறியது பற்றி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.

'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக்கா?'

அதற்குப் பதில் அளித்த நிதியமைச்சர் ஜெட்லி, "வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு, அதைப் பற்றிய உத்தேசக் கணிப்புகளின் அடிப்படையில் அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டோமேயானால், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏற்படும் பயன் ரூ.15 லட்சமாக இருக்கும் என்ற அடிப்படையில் எடுத்துகாட்டு கூற்றாக மட்டுமே அது கூறப்பட்டது' என்றார்.

செமெஸ்டர் அரியர் கிளியர் பண்றது எப்படி? ன்னு கேட்டா, சேரன் பட டீவீடி பாருன்னு சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் அருண் ஜெட்லி.

மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடி  தனது பிரசாரத்தில், "வெளிநாடுகளில் 80 லட்சம் கோடி இந்திய பணம் சட்டத்திற்குப் புறம்பாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மொத்த கருப்புப் பணத்தையும் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம். அதைக் கொண்டு வந்தால் இந்தியாவின் மொத்த கடனையும் அடைத்து, நாடு முழுவதையும் சிங்கப்பூர் போல மாற்றி, ஆளுக்கு கையில் மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க முடியும். அடுத்த முந்நூறு வருஷத்துக்கு வரியில்லாத பட்ஜெட் போடுவோம்" என்று கூறியிருந்தார்.

'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக்கா?'

கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்விஸ் லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ள தகவலில், 2006-2007 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இது பற்றிய ஆய்வை இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் வாஷிங்டனை சேர்ந்த சர்வதேச துப்பறியும் ஊடகவியலாளர் கூட்டமைப்பும் இணைந்து  ரகசிய ஆய்வை மேற்கொண்டன. 1195 பேரின் கருப்பு பண வங்கி கணக்குகள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. இவர்கள் ஏறத்தாழ சுமார் 25, 420 கோடி ரூபாய் பதுக்கி உள்ளதாக தெரிந்தது. அதில் 100 பேர் பேரின் பெயர்களும், பதுக்கிய தொகை பற்றிய விவரங்களும் தெரிந்தது.

இதனைக்கண்டு சுதாரித்து கொண்ட மத்திய அரசு,  கடந்த  அக்டோபரில் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தைப் பதுக்கிய 627 இந்தியர்களின் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் பாதி பேர் கணக்கில் பணமே இல்லை என பின்னர் தெரிய வந்தது.

இந்நிலையில், கருப்பு பண நிலவரம் பற்றி மத்திய அரசு தற்போது, "வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் சிலர் பெயர்கள் மட்டுமே இவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதுவும் நேரிடையாக அல்ல, ஜெர்மானிய அரசுக்கு எப்படியோ கிடைத்த தகவலை நம் அரசோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் பலரது கணக்குகள் சட்டப்படியானதாகவும் இருக்கக் கூடும்.

'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக்கா?'

அவர்கள் எவரது பெயரையும் இவர்களால் வெளியிட முடியாது காரணம் அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக பணத்தை பதுக்கியுள்ளனர் என்று நிரூபிக்கப்படும் முன்னர் அவர்களது வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடுவது அவர்களது தனிநபர் உரிமையில் மூக்கை நுழைப்பதாகும்" எனக் கூறியுள்ளது.

பதுக்கியுள்ள பணம் 80 லட்சம் கோடி என்றவர்கள், தற்போது வெறும் 14,000 கோடி மட்டுமே என்கிறார்கள். இன்னும் எவ்வளவு குறையுமோ ?

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள் என சொல்லலாமா...இல்லை திருநெல்வேலி அல்வாவை நன்றாக கிண்டி தருகிறார்கள் என்று சொல்லலாமா..? இல்லை 'பிதாமகன்' படத்தில் சூர்யா சொல்கிற மாதிரி " கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி சரோஜா தேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பா" தான் கடைசியில் நமக்கு என சொல்லலாமா?

- ஷான் (மயிலாடுதுறை )

அடுத்த கட்டுரைக்கு