Published:Updated:

ஒண்ணுமில்லாததை காங். பிரச்னையாக்குகிறது: வெங்கையா நாயுடு கண்டனம்!

Vikatan Correspondent
ஒண்ணுமில்லாததை காங். பிரச்னையாக்குகிறது: வெங்கையா நாயுடு கண்டனம்!
ஒண்ணுமில்லாததை காங். பிரச்னையாக்குகிறது: வெங்கையா நாயுடு கண்டனம்!
ஒண்ணுமில்லாததை காங். பிரச்னையாக்குகிறது: வெங்கையா நாயுடு கண்டனம்!

புதுடெல்லி: ராகுல்காந்தி வீட்டுக்கு போலீசார் விசாரணைக்காக சென்றதை பிரச்னை ஆக்குவதா? ஒண்ணுமில்லாததை காங்கிரஸ் பிரச்னையாக்குகிறது என்று காங்கிரசுக்கு வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் டெல்லி துக்ளக் லேன் வீட்டுக்கு கடந்த வாரம் சென்ற போலீசார், அங்கிருந்தவர்களிடம் ராகுல்காந்தியின் அங்க அடையாளங்கள் குறித்து பல கேள்விகளை கேட்டுள்ளனர். உடனே, பாதுகாப்பு தணிக்கைக்காகவே போலீசார் இதுபோல் விசாரணை நடத்தினர் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸ்சி குறிப்பிட்டார்.

ஆனாலும், ராகுல்காந்தி வீட்டுக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ''மோடி அரசு ராகுல்காந்தியை அரசியல் ரீதியாக உளவு பார்க்கிறது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் பிரச்னையை எழுப்புவோம். பிரதமரோ, அல்லது மத்திய உள்துறை அமைச்சரோ இது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். வேறு யார் விளக்கம் அளித்தாலும் அதை நாங்கள் ஏற்கமாட்டோம்" என்று கூறினர்.

இந்நிலையில், இதற்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில், ''எதற்காக இந்த பரபரப்பு என்று தெரியவில்லை. இதுபோன்ற கேள்விகளை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது போலீசார் என்னிடமும் கேட்டு இருக்கிறார்கள். இப்போது ஆட்சிக்கு வந்த பிறகும் என்னிடமிருந்து இந்த தகவல்களை பெற்று உள்ளனர். அதனால், ஒன்றுமே இல்லாத விஷயத்தை காங்கிரஸ் பெரிய பிரச்னை ஆக்க முயற்சிக்கிறது" என்று கூறி உள்ளார்.