Published:Updated:

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் அமைச்சர் மீது வழக்கு!

Vikatan Correspondent
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் அமைச்சர் மீது வழக்கு!
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் அமைச்சர் மீது வழக்கு!
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் அமைச்சர் மீது வழக்கு!

ஜார்க்கண்ட்: சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் மன்னன் மாலிக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஹேமந்த் சோரன் தலைமையிலான முந்தைய அரசில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக பதவி வகித்தவர் மன்னன் மாலிக். நோய்வாய்ப்பட்டு இருக்கும் மன்னன் மாலிக்கின் மனைவியை கவனித்துக் கொள்வதற்காக அவரது வீட்டில் 13 வயது சிறுமி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த சிறுமி, காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மீது புகார் அளித்தார். அதில், மன்னன் மாலிக் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து செய்திகள் வெளி வந்ததை அடுத்து, முன்னாள் அமைச்சர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரை கைது செய்ய வேண்டும் என்று, பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

இந்த விவகாரம், தற்போது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.