Published:Updated:

மார்கண்டேய கட்ஜூ மனநலம் பாதிக்கப்பட்டவர்: காங்கிரஸ் தாக்கு!

Vikatan Correspondent
மார்கண்டேய கட்ஜூ மனநலம் பாதிக்கப்பட்டவர்: காங்கிரஸ் தாக்கு!
மார்கண்டேய கட்ஜூ மனநலம் பாதிக்கப்பட்டவர்: காங்கிரஸ் தாக்கு!
மார்கண்டேய கட்ஜூ மனநலம் பாதிக்கப்பட்டவர்: காங்கிரஸ் தாக்கு!

புதுடெல்லி: மகாத்மா காந்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூவை, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்து உள்ளது.

மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் முகவர் என்றும், நேதாஜி ஜப்பானியரின் முகவராகச் செயல்பட்டதாகவும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜூ கூறியிருந்தார். இதற்கு அனைத்து தரப்பிடம் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இது குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்த கட்ஜூ, நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மட்டும் போதாது, விசாரணையே இல்லாமல் என்னை தூக்கில் போட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா, கட்ஜூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போலச் செயல்படும் கட்ஜூ, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பு வகித்தது துரதிஷ்டவசமானது என்றும் விமர்சித்தார்.